Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெள்ளை நிற நடிகைகளை கொண்டு வந்தவர்கள் : பாரதிராஜா, ஷங்கர் மீது கஸ்தூரி ஆதங்கம்

17 ஏப், 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-slams-Bharathiraja-and-Shankar

"தமிழ் கலாச்சாரம் பேசும் பாரதிராஜாவும், ஷங்கரும் வெள்ளை நிற நடிகைகளை கொண்டு வந்து பாவாடை தாவணி கட்டி தமிழச்சி என்றார்கள்" என்று நடிகை கஸ்தூரி கடுமையாக தாக்கி பேசினார். புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய முடிவில்லா புன்னகை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கஸ்தூரி பேசியதாவது :

சினிமாவின் தொடக்க காலத்தில் கூட கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.ராஜகுமாரி போன்ற தமிழ்நாட்டு நிறத்தில் இருப்பவர்கள் நடித்தனர். ஆனால், எப்போது நாம் வெள்ளையர்களை பார்த்து காப்பி அடிக்க ஆரம்பிச்சோமோ அப்போதிருந்துதான் இந்த பிரச்சனையும் ஆரம்பித்தது. இயக்குநர் மகேந்திரன் ஷோபோ, அஸ்வினி, சுஹாசினி போன்ற நம் மண்ணின் நிறத்தையுடைய திறமையான கதாநாயகிகளை கொண்டு வந்தார். அதேபோல தான் சரிதா, சுஜாதா, சுகன்யா போன்றோர்களும்.

ஆனால், ரஜினிகாந்த் முதல் பிரகாஷ்ராஜ் வரை கருப்பான நாயகர்களை தமிழ்நாட்டிற்கு பரிசாக தந்த பாரதிராஜா, தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், கதாநாயகி மட்டும் ரியா சென் என்று வெள்ளை நிறத்தில் வடநாட்டு பெண்ணை அறிமுகம் செய்து இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் எனக்கு உண்டு. அதேபோல், ஷங்கர் ஒருபடி மேல சென்று ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனையும் நம்ம ஊர் பெண் என்று தாவணி போட்டு, இவர் தமிழ்நாட்டு பெண் என்று மாற்றிவிட்டார்.

மரியாதை போதும்
பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று பகுத்தறிவு பேச வேண்டிய ஒரு கருவியாக இருக்க வேண்டிய சினிமா இன்று, பாசாங்குகளை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது. பெண் விடுதலை என்று கூறி எங்களை கட்டிபோடாதீர்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு, சமஉரிமை இதெல்லாம் வேண்டாம். குறைந்தபட்ச மரியாதை கொடுத்தாலே போதும்.

இவ்வாறு கஸ்தூரி பேசினார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவுக்குக் காத்திருக்கும் கடும் போட்டிசூர்யாவுக்குக் காத்திருக்கும் ... இறுதிக்கட்டத்தில் அடுத்த சாட்டை இறுதிக்கட்டத்தில் அடுத்த சாட்டை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18 ஏப், 2019 - 13:57 Report Abuse
கல்யாணராமன் சு. இதென்ன reverse racism இல்லே இருக்கு ? அதையும் தவிர வடநாடு, தென்னாடுன்னு, சீமான் நாம் தமிழர் கட்சி மாதிரி பேசிக்கிட்டு இருக்காரு ??
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
18 ஏப், 2019 - 07:01 Report Abuse
venkat Iyer ஷங்கர் படம் மிகுந்த செலவு செய்யப்படுவதால்,பல மொழிகளில் வெளியிடவேண்டிய நிர்பந்தத்தினால் பாலிவுட்டு நடிகையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
Rate this:
thiru - Chennai,இந்தியா
18 ஏப், 2019 - 06:29 Report Abuse
thiru பிற நடிகர் நடிகைகள் மாதிரி சொம்பு தூக்காமல் பட்டென்று மனதில் உள்ளதை வெளிப்படையாக தைரியமாக பேசிய கஸ்தூரியை பாராட்டியே ஆக வேண்டும்...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
18 ஏப், 2019 - 03:55 Report Abuse
meenakshisundaram உண்மையே ,ஆனால் ஒரு வித்யாசம் ,சங்கர் வெளிப்பார்வைக்கு என்றே திட்டமிட்டு கருப்பு நடிகைகளை (அந்த காலத்தில் இவர்களை 'தமிழ் ' அல்லது 'திராவிட' நடிகைகள் என்பார்கள்)விட்டு வெளி மாநில வெள்ளை அழகிகளை கொண்டு வந்தார், ஆனால் நம்ம அண்ணனோ அதிலும் அரசியல் செய்வார். கிழக்கே போகும் ரயிலில் ராதிகா (திராவிட /தெலுங்கு ) நடிகைதான் ஆனா அப்போ அவர் லண்டனில் படித்து முடித்திருந்த நேரம்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
17 ஏப், 2019 - 18:52 Report Abuse
Vasudevan Srinivasan கஸ்தூரி அவர்களின் பேச்சை யூடியூபில் பார்த்தேன் அவர் கடுமையாக தாக்கியெல்லாம் பேசவில்லை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவ்வளவே இதை செய்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சல் கஸ்தூரி மேடமும் இருக்கிறது.. பாராட்டுக்கள்.. இன்று ஒரு படத்தில்கூட நடிக்கும் நடிகைகளின் பெயரை உச்சரிக்கக்கூட முடியவில்லை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in