Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெள்ளை நிற நடிகைகளை கொண்டு வந்தவர்கள் : பாரதிராஜா, ஷங்கர் மீது கஸ்தூரி ஆதங்கம்

17 ஏப், 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-slams-Bharathiraja-and-Shankar

"தமிழ் கலாச்சாரம் பேசும் பாரதிராஜாவும், ஷங்கரும் வெள்ளை நிற நடிகைகளை கொண்டு வந்து பாவாடை தாவணி கட்டி தமிழச்சி என்றார்கள்" என்று நடிகை கஸ்தூரி கடுமையாக தாக்கி பேசினார். புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய முடிவில்லா புன்னகை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கஸ்தூரி பேசியதாவது :

சினிமாவின் தொடக்க காலத்தில் கூட கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.ராஜகுமாரி போன்ற தமிழ்நாட்டு நிறத்தில் இருப்பவர்கள் நடித்தனர். ஆனால், எப்போது நாம் வெள்ளையர்களை பார்த்து காப்பி அடிக்க ஆரம்பிச்சோமோ அப்போதிருந்துதான் இந்த பிரச்சனையும் ஆரம்பித்தது. இயக்குநர் மகேந்திரன் ஷோபோ, அஸ்வினி, சுஹாசினி போன்ற நம் மண்ணின் நிறத்தையுடைய திறமையான கதாநாயகிகளை கொண்டு வந்தார். அதேபோல தான் சரிதா, சுஜாதா, சுகன்யா போன்றோர்களும்.

ஆனால், ரஜினிகாந்த் முதல் பிரகாஷ்ராஜ் வரை கருப்பான நாயகர்களை தமிழ்நாட்டிற்கு பரிசாக தந்த பாரதிராஜா, தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், கதாநாயகி மட்டும் ரியா சென் என்று வெள்ளை நிறத்தில் வடநாட்டு பெண்ணை அறிமுகம் செய்து இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மேல் எனக்கு உண்டு. அதேபோல், ஷங்கர் ஒருபடி மேல சென்று ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனையும் நம்ம ஊர் பெண் என்று தாவணி போட்டு, இவர் தமிழ்நாட்டு பெண் என்று மாற்றிவிட்டார்.

மரியாதை போதும்
பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று பகுத்தறிவு பேச வேண்டிய ஒரு கருவியாக இருக்க வேண்டிய சினிமா இன்று, பாசாங்குகளை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது. பெண் விடுதலை என்று கூறி எங்களை கட்டிபோடாதீர்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு, சமஉரிமை இதெல்லாம் வேண்டாம். குறைந்தபட்ச மரியாதை கொடுத்தாலே போதும்.

இவ்வாறு கஸ்தூரி பேசினார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவுக்குக் காத்திருக்கும் கடும் போட்டிசூர்யாவுக்குக் காத்திருக்கும் ... இறுதிக்கட்டத்தில் அடுத்த சாட்டை இறுதிக்கட்டத்தில் அடுத்த சாட்டை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Raju Angarayar - Riyadh,சவுதி அரேபியா
24 ஏப், 2019 - 13:04 Report Abuse
Raju Angarayar in 1958, in tamil film UTHAMAPUTHIRAN the Helan actress danced with the great leg stylish actor, Sivagi Ganesan.... our south indian actoress hame, vaijayanthi, worked bollywood....for film industry there is no boundary in india.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24 ஏப், 2019 - 12:55 Report Abuse
Ramesh R பாரதிராஜா ஒரு நயவஞ்சகம் பிடித்தவன் - இன்று தமிழ் தமிழ் என்று அலைகிறான்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23 ஏப், 2019 - 17:17 Report Abuse
A.George Alphonse Very good and bold comments about Mr Bharathi Raja and Mr Shankar.What to do nowadays the film industry have turned up like commercial industry and investment of crores and crores and also to take back the investment by introducing White color actors from other states.There are lot of difference between those days and these days as the things are changing day by day .
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19 ஏப், 2019 - 06:56 Report Abuse
 nicolethomson இப்போ தமிழ் என்று பேசும் குடும்ப சேனல்கள் அதன் சீரியல் தேவைக்கு வெள்ளை நடிகைகள் தான் என்று பெங்களூர் கேரளாவில் இருந்து அள்ளிக்கிட்டு வர்றாங்க , நீங்க என்னடான்னா?
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 ஏப், 2019 - 04:44 Report Abuse
J.V. Iyer கஸ்தூரி பேச்சை ஆமோதிக்கிறேன். சரியாக பேசுகிறார். சரியாகத்தான் பேசுகிறார்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in