Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏப்ரல் 19 போட்டியில் 3 படங்கள்

16 ஏப், 2019 - 17:36 IST
எழுத்தின் அளவு:
This-week-3-movies-releasing

தமிழ்ப் புத்தாண்டுக்கு எந்த புதுப் படங்களும் வெளியாகாமல் அதற்கு இரண்டு நாள் முன்னதாக எப்ரல் 12ம் தேதியே நான்கு படங்கள் வெளிவந்தன. பண்டிகை நாட்களில் சில முக்கிய படங்கள் வெளிவருவது வழக்கம் தான். ஆனால், அது இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையிலும் நடக்கவில்லை, தமிழ்ப் புத்தாண்டிலும் நடக்கவில்லை. பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னர் கூட விஸ்வாசம், பேட்ட என்கிற பெரிய படங்கள் வந்தன. ஆனால் தமிழ்புத்தாண்டில் அது நடக்கவில்லை.

தமிழ்ப் புத்தாண்டு முடிந்த பின் வரும் வெள்ளியான ஏப்ரல் 19ம் தேதி 3 படங்கள் வெளிவருகின்றன. காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள் ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளன.

காஞ்சனா, காஞ்சனா 2 இரண்டு படங்களுமே பெரிய வசூலைக் கொடுத்த படங்கள். அதுபோலவே இந்த காஞ்சனா 3 படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகளுடன் படத்தை குடும்பத்தோடு வந்து பார்ப்பார்கள் என படக்குழு எதிர்பார்க்கிறது.

மெஹந்தி சர்க்கஸ் படம் புதிய இயக்குனர், புதுமுக ஹீரோ, ஹீரோயின் பங்களிப்பு உடன் வெளிவருகிறது. காதல் கதைகளுக்கு என்றுமே ஒரு வரவேற்பு இருக்கும். அது இந்தப்படத்திற்கும் கிடைக்கும் என நினைத்து நேற்றே படத்தின் பத்திரிகையாளர் காட்சியை திரையிட்டுவிட்டார்கள்.

வெள்ளைப் பூக்கள் படம் அமெரிக்க வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள படம். இதற்கு முன் சில படங்களில் நாயகனாக நடித்து வரவேற்பைப் பெறாத விவேக் இந்தப் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

பொதுவாக தமிழ்ப் புத்தாண்டிலிருந்துதான் கோடை விடுமுறைப் படங்கள் ஆரம்பமாகும். இந்த வாரம் வெளியாகும் படங்கள் வெற்றிக் கணக்கை ஆரம்பித்தால் கோடை முடியும் வரை வெளியாக உள்ள மற்ற படங்களுக்கும் புத்துணர்வைக் கொடுக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
10 கிலோ எடை குறைத்த ரகுல் பிரீத் சிங்10 கிலோ எடை குறைத்த ரகுல் பிரீத் சிங் கவர்ச்சியில் புதிதாகச் சேர்ந்த பூஜா ஹெக்டே கவர்ச்சியில் புதிதாகச் சேர்ந்த பூஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in