Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் பாடிய யேசுதாஸ்

16 ஏப், 2019 - 15:13 IST
எழுத்தின் அளவு:
KJ-Yesudas-sing-song-in-Ilayaraja-music-after-10-years

இளையராஜா - கேஜே.யேசுதாஸ் கூட்டணியில் பல அருமையான பாடல்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக இவர்கள் இருவரும் 2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின்னர் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடவில்லை.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகி வரும் தமிழரசன் படத்தில் யேசுதாஸ் பாடியிருக்கிறார். "பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா" என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாடியிருக்கிறார்.

இந்தப்பாடல் பதிவின்போது யேசுதாஸ்க்கு பூங்கொத்து கொடுத்து இளையராஜா, இப்பட இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஜி.சிவா ஆகியோர் வரவேற்றனர். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.

தமிழரசன் படத்தை எஸ்.என்.எஸ்.மூவீஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிக்கிறார். விஜய் ஆண்டனி உடன் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாபு யோகேஸ்வரன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
4 மொழிகளில் வெளியாகும் 'காஞ்சனா 3'4 மொழிகளில் வெளியாகும் 'காஞ்சனா 3' காதல், குடும்பம் : விக்னேஷ் சிவன் குதூகலம் காதல், குடும்பம் : விக்னேஷ் சிவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Roopa Malikasd - Trichy,இந்தியா
19 ஏப், 2019 - 19:44 Report Abuse
Roopa Malikasd இளையராஜா ஒரு பட்ட மரம் ..
Rate this:
Rassi - nellai,இந்தியா
18 ஏப், 2019 - 11:28 Report Abuse
Rassi some days before KJ announced that he will not sing Ilyaraja songs anymore since Ilyaraja is asking for money for his songs . This also same like politics , nothing is forever .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
18 ஏப், 2019 - 03:45 Report Abuse
meenakshisundaram யேசுதாஸ் ஒரு வைரக்கல் என்றால் அவரை செதுக்கும் சிற்பி இளைய ராஜா அவர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in