Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஹீரோயின் ஆனார் இனியா

16 ஏப், 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Iniya-again-acting-as-heroine-in-Tamil

கேரளத்து வரவு இனியா, ஆரம்ப காலங்களில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். வாகைசூடவா படம் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்தது கண்பேசும் வார்த்தைகள் என்ற படம். 2013ல் இந்தப் படம் வெளிவந்தது. அதன்பிறகு அவர் பல படங்களில் ஹீரோயின்களில் ஒருவராக, குணசித்ர வேடங்களில், சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார். ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு காபி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ராகுல்தேவ், முக்தா கோட்சே, சவுந்தர்ராஜன், ராமச்சந்திரன், தரணி வாசுதேவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், வெங்கட்நாத் இசை அமைக்கிறார். சாய் கிருஷ்ணா இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள்.

இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது, சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை. அந்த துணிச்சலான பெண்ணாக இனியாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும்.

நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை இத்திரைப்படம் தோலுரித்து காட்டியிருக்கும் விதம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கும். மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை படம் ஏற்படுத்தும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காப்பான் டீசர் தொடர்ந்து டிரென்டிங்கில் நம்பர் 1காப்பான் டீசர் தொடர்ந்து ... 4 மொழிகளில் வெளியாகும் 'காஞ்சனா 3' 4 மொழிகளில் வெளியாகும் 'காஞ்சனா 3'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in