Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒளதடம் படத்திற்கு தடை நீக்கம்

16 ஏப், 2019 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Relief-for-Owthadam-film

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் ஒளதடம். நேதாஜி பிரபு, சமீரா, விநாயக்ராஜ், பாலாம்பிகா, முரளி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வி.சசி இசை அமைத்துள்ளார். ஒளதடம் என்றால் மருந்து என்று பொருள். சர்க்கரை வியாதிக்கான மருந்தில் நடக்கும் முறைகேடுகளை பற்றி பேசுகிற படம்.

இந்தப்படம் வெளியிட இருந்த நேரத்தில் படத்தை எம்.ஜி.அடிப்படையில் வாங்கியிருந்த விநியோகஸ்தர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனால் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்து. தற்போது நீதிமன்றம் தடையை விலக்கி உள்ளது. இதனால் படம் விரைவில் வெளிவரும் என்று அதன் தயாரிப்பாளரும், ஹீரோவுமான நேதாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 4 மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சிலரின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. பணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சிலரால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி தான் இத்தடைக்குக் காரணம். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி, ஆதாரங்களை காட்டி தடை நீக்கம் பெற்றுள்ளோம். நீதி வென்றுள்ளது.

இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க 70 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம் தான் ஒளடதம். விரைவில் திரைக்கு வருகிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு, மதுபாலா23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து ... காப்பான் டீசர் தொடர்ந்து டிரென்டிங்கில் நம்பர் 1 காப்பான் டீசர் தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in