பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், யோகி பாபு, ஆனந்தராஜ், உட்பட பலர் நடிக்கும் 'விஜய்-63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
நம்ம ஊர் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வெளிமாநிலத்தில் குறிப்பாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு வைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் விஜய். அதனாலேயே சென்னையிலும் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்படத்திற்காக சென்னையில் உள்ள இவிபி ஸ்டுடியோவில் மிகப்பெரிய கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை 'செட்' போட்டுள்ளனர். இந்த மைதானத்தில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. அட்லீயும் விஜய்யும் மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சொன்ன பட்ஜெட்டைவிட அதிக செலவாகிவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு, அட்லீ மீது குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு விஜய்யிடம் விளக்கம் அளித்த அட்லீ, அந்த மாதிரி எதுவும் இல்லை, எல்லாவற்றுக்கும் சரியான கணக்கு உள்ளது. ஆடிட்டர் வைத்து கூட கணக்கு பார்த்து கொள்ளட்டும் என்று தன் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறாராம். விஜய்யும் ஏற்றுக்கொண்டதாக தகவல்.