Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதாநாயகியிலிருந்து தங்கை நடிகையாக...

16 ஏப், 2019 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-acting-as-sister-role

'இருவர்', 'நேருக்கு நேர்', 'தில்சே', 'அலைபாயுதே', 'ராவணன்' உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' படநிறுவனத்தின் 19-வது தயாரிப்பாக உருவாகிறது 'வானம் கொட்டட்டும்'.

இந்த படத்தின் கதை, வசனத்தை மணிரத்னம் எழுத, மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த தனா இயக்குகிறார். இவர் பாடகர் விஜய்யேசுதாஸ் ஹீரோவாக நடித்த 'படை வீரன்' என்றபடத்தை இயக்கியவர்.

வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். '96' படத்துக்கு இசையமைத்ததன் மூலம் புகழ்பெற்ற கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 'அபியும் நானும்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரீத்தா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார். இப்போது வானம் கொட்டட்டும் படத்திலும் அவருக்கு தங்கை வேடம். போகிற போக்கைப்பார்த்தால் ஐஸ்வர்யா ராஜேஷை தங்கை வேட நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்கள் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூரரைப்போற்று - விமானம் ஓட்டிய தமிழனின் கதைசூரரைப்போற்று - விமானம் ஓட்டிய ... யோகிபாபு இல்லை... யோகபாபு யோகிபாபு இல்லை... யோகபாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஏப், 2019 - 14:40 Report Abuse
DUBAI- Sivagangai Rajesh. எது எப்பொடியோ , பணம் வந்தால் போதும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in