Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமாதானமா? சவாலா? - சீமானுக்கு ராகவா லாரன்ஸ் மறைமுக எச்சரிக்கை

15 ஏப், 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Raghava-lawrence-warning-to-Seeman

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்சுக்கும், இயக்குனரும், அரசியல் கட்சித் தலைவருமான சீமானுக்கும் இடையே பல நாட்கள் பனிப்போர் நடந்து வருகிறது. சீமான் கட்சித் தொண்டர்கள், ராகவா லாரன்சை வலைத்தளங்களில் கிண்டலும், கேலியும் செய்து வருகிறார்கள். அவர் வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றால் அங்கு பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீமானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்ணா வணக்கம். உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து மனதார வாழ்த்தினேன். அதற்குத் தாங்கள் நன்றியும், மகிழ்ச்சியும் தம்பி என தெரிவித்திருந்தீர்கள். அதன் பிறகும். இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன். அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன். ஆனால் நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்.

நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன். இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன். என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள். ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள். என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்.

உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் பேஸ்புக், Iவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள். அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள். எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது.

நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆனால் மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை வார்த்தைகளாலும், செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள். இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன். ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது.

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன். ஆனால் மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும், பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனவே, உங்களுடைய அந்த ஒருசில தொண்டர்களை அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும், எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள். நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் "ஹீரோவாக்கி" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள். நான் சேவையை அதிகமாக செய்வேன். மக்களுக்கு பேசுகிறவர்களை விட, செயலில் காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும். நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து, நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்? நான் என்னென்ன நன்மைகள் செய்தேன் என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல முடியாது.

உங்களது பெயரை நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம்? பயம் இல்லை. நாகரிகம்தான் காரணம். அது மட்டுமல்லாமல் இது தேர்தல் நேரம் வேறு. இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை.

நான் சொல்வது சரி என உங்களுக்கு தோன்றினால் "தம்பி வாப்பா பேசுவோம்" என கூப்பிடுங்கள். நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன். உட்கார்ந்து மனம் விட்டு பேசுவோம். சுமூகமாகி அவரவர் வேலையை அவரவர் செய்வோம். நீங்களும் வாழுங்கள், வாழவும் விடுங்கள். இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என நீங்கள் முடிவெடுத்தால்.... அதற்கும் நான் தயார். சமாதானமா? சவாலா? முடிவை நீங்களே எடுங்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
காஜல் அகர்வால் - பேஸ்புக் 2.3 கோடி, இன்ஸ்டாகிராம் 1 கோடிகாஜல் அகர்வால் - பேஸ்புக் 2.3 கோடி, ... தமிழுக்கு வரும் பானு ஸ்ரீ தமிழுக்கு வரும் பானு ஸ்ரீ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

jayanantham - tamilnaadu ,இந்தியா
18 ஏப், 2019 - 01:33 Report Abuse
jayanantham ஈழத்தமிழ்ப்பெண்ணைத் திருமணம் செய்வேன் என்று சொல்லி ஸ்டண்ட் அடித்து அவர்களிடம் முடிந்தவரை பிச்சை எடுத்துவிட்டு, பிறகு காளிமுத்து மகளைக் கல்யாணம் செய்து கொண்ட கயவன். இவன் தமிழர்கள், அரசியல், கட்சி என்று பித்தலாட்டம் செய்து கொள் ளை அடிக்கும் திருடன்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஏப், 2019 - 05:55 Report Abuse
meenakshisundaram சைமன் 'சும்மா' காமெடி பேச்சுத்தான் .சீசன் முடிந்ததும் காணாமல் கலெக்ஷன் ஓவர்) போகும் அவர் வசூல் வேட்டை நடத்தியே வேடிக்கை காட்டி தமிழக்தில் வெட்டியாக உள்ளவர்களை சேர்த்து வேலை செய்பவர்களை கேலி செய்யும் அநாகரீகம்.லாரன்ஸ் போன்ற கடும் உழைப்பை பார்த்திருக்கக்கூட சீமான் இருக்க மாட்டார்.பார்தி பாடிய படி நாம் உழைத்து அடைந்த சுதந்திர நாட்டில் இந்த மாதிரி கயமைத்தனம் செயது சோம்பித்தனத்தை வளர்க்கும் இந்த கூட்டத்தினரை கேரளாவின் செய்ய மாட்டார்கள்.அதுதான் இவன் இங்கே ஓடி வந்து 'பிழைப்பை' நடத்துகிறான்.
Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
16 ஏப், 2019 - 12:35 Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) சவாலே சமாளி சீமானை விரட்டு தமிழகம் மீண்டும் அமைதி மற்றும் நிம்மதி பெற வேண்டும். நேற்ற பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் களை எடுக்கப்பட வேண்டும்
Rate this:
RAJ - dammam,சவுதி அரேபியா
16 ஏப், 2019 - 06:25 Report Abuse
RAJ Gentleman Lawrence
Rate this:
ar saravanan - tiruchirapalli,இந்தியா
15 ஏப், 2019 - 16:38 Report Abuse
ar saravanan லவ்ரன்ஸ் அவர்களே நீங்கள் இந்த பன்னாடைகளாம் கவலை படாதீர்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in