Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷீரடி சாய்பாபா பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்

15 ஏப், 2019 - 10:48 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-composed-music-for-Shirdi-Sai-baba

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஷீரடி சாய்பாபா பற்றிய பக்திப் பாடல் ஒன்றிற்கு இசையமைத்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அந்தப்பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று யு-டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்ப் பாடலை மஷுக் ரஹ்மான், ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி பாடல்களை பேலா ஷிண்டே, ஏஆர் ரஹ்மான் பாடியிருக்கிறார்கள்.



கன்னடத்திலும் இந்தப் பாடலை வெளியிடலாமே என ஒரு ரசிகர் டுவிட்டரில் கேட்டதற்கு, வேண்டுகோள் ஏற்கப்பட்டது என ஏ.ஆர்.ரஹ்மான் அந்த ரசிகருக்கு பதிலளித்திருக்கிறார். அதனால், விரைவில் கன்னடத்திலும் அந்தப் பாடலை எதிர்பார்க்கலாம்.

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் பக்திப் பாடல்களுக்கு இசையமைக்க மாட்டார் என்று கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு தகவல் உண்டு. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் இடம் பெற்ற ஒரு ஐயப்பன் பாடலுக்குக் கூட அப்போது ரஹ்மானின் உதவியாளர் ஆக இருந்த பிரவீண் மணி இசையமைத்தார்.

இப்போது ஷீரடி சாய்பாபா பற்றிய பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது பாபா பக்தர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்தப் பாடல் பற்றி ரஹ்மான் கூறுகையில், “அவர்கள் சொல்வதைப் போல, நீங்கள் பாடலை கம்போஸ் செய்வதில்லை, பாடல்தான் உங்களை கம்போஸ் செய்கிறது. இந்த தமிழ்ப் புத்தாண்டை சாய் ஷீரடி சாய் உடன் கொண்டாடுங்கள்,” எனக் கூறியுள்ளார்.




Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விவசாயம், கார்பரேட், பயங்கரவாதம் : அதிரடி காட்டும் காப்பான் டீசர்விவசாயம், கார்பரேட், பயங்கரவாதம் : ... ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

khaandee - jaffna,இலங்கை
16 ஏப், 2019 - 06:44 Report Abuse
khaandee மாதங்கி அருளும் ப்ரகாசாம் என்கிற வெளிநாட்டு தமிழ் பெண்ணால்த்தான் a.ர் ரெஹம்ன் ஆஸ்கார் விருது பெற்றார் . அப்படத்தின் இசையில் அவருக்காக வேலை செய்து அவ்விருதிற்கு காரணமான அப்பெண்ணை a,r,ரஹ்மான் என்றழைக்கப்படும் திலீப் அவர்கள் மாதங்கி பற்றி எங்கும் குறிப்பிடவில்லை ஏன்?.{அவர் ஓர் இலங்கை தமிழ்ப்பெண் [தமிழ் ஈழத்திட்கு ஆதரவானவர் ]. சாய் பாபா ஒரு முஸ்லிமா இந்துவா என்று வரையடுக்க படைத்தவர் அதனால் a.r.ரேமான் என்கிற திலீப் இற்கு ஒரு சட்ட பிரச்சினையும் இல்லை .
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16 ஏப், 2019 - 03:53 Report Abuse
J.V. Iyer மோடி திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளீரா?
Rate this:
Vijay - Chennai,இந்தியா
15 ஏப், 2019 - 16:29 Report Abuse
Vijay
Rate this:
yogi1 - uk,யுனைடெட் கிங்டம்
15 ஏப், 2019 - 14:35 Report Abuse
yogi1 ரொமான்டிக் சோங் மாதிரி இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in