Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜே.கே.ரித்திஷ் மரணம் : திரை பிரபலங்கள் இரங்கல்

14 ஏப், 2019 - 14:28 IST
எழுத்தின் அளவு:
celebraties-condonce-to-j.k.ritheesh

நடிகரும், முன்னாள் எம்.பி., ஆன ஜே.கே.ரித்திஷ் நேற்று (ஏப்.,13)மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் டுவிட்டரிலும், அறிக்கையாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.விஷால் : வாழ்க்கை யூகிக்க முடியாதது. என்னுடைய நெருங்கிய நல்ல நண்பர் ஜெ. கே. ரீதிஷ் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி நம்ப முடியவில்லை.மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கடவுளிடம் அவர்களுக்கு இந்த துயரமான வேளையில் தைரியம் அளிக்கவும் அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.


லாரன்ஸ் : கலையுலகிலிருந்து அரசியலுக்கு போய் வெற்றி பெற்றவர் ரித்திஷ். அவர் எவ்வளவோ பேருக்கு உதவி செய்திருக்கிறார் என்கிற தகவல் எனக்கு வரும் போதெல்லாம் அவரை நினைத்து சந்தோஷப் படுவேன். அவரது மறைவை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் : நடிகரும், முன்னாள் ராமநாதபுரம் எம்.பி.,யமான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான ஜெ.கே.ரித்தீஷ் (எ) சிவக்குமார் காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர் அரசியலிலும், திரைத்துறையிலும் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர். ஜெ.கே.ரித்தீஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.


அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரது இழப்பால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கறோம்.
வரலட்சுமி சரத்குமார் : நான் அவரை சந்தித்ததில்லை. ஆனாலும் அவர் நல்ல மனிதர். அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்திற்கு பெரம் அதிர்ச்சியாக இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கறேன்.


வெங்கட் பிரபு : உண்மையில் மிக நல்ல மனிதர். மிக விரைவில் சென்று விட்டார். மிகவும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மாபிரமாண்ட படமாகும் ஆதித்ய வர்மா விவசாயம், கார்பரேட், பயங்கரவாதம் : அதிரடி காட்டும் காப்பான் டீசர் விவசாயம், கார்பரேட், பயங்கரவாதம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

15 ஏப், 2019 - 14:12 Report Abuse
Kalyanaraman பாலாஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாக பேப்பரில் வந்துள்ளது.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
15 ஏப், 2019 - 01:04 Report Abuse
jayanantham சமீபத்தில் LKG படத்தில் நடித்திருந்தார். RJ பாலாஜி கதாநாயக ன். அவரிடமிருந்து எந்த அனுதாப செய்தியும் இல்லையே
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
15 ஏப், 2019 - 09:39Report Abuse
Vijayஅனுதாப செய்தி வந்தால் மீண்டும் உயிர் பெற்று விடுவாரா , திருந்துங்கடா அடுத்தவனை குறை சொல்லி வாழ்க்கையை ஒட்டாதே...
Rate this:
Dhavan - Thiruvarur,இந்தியா
15 ஏப், 2019 - 10:17Report Abuse
Dhavanஅவரு ஏற்கனவே தெரிவித்துவிட்டார்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in