Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொத்து பிரச்சினை: நடிகை சங்கீதா - தாய் மோதல்

13 ஏப், 2019 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Wealth-issue-:-Sangeetha-and-her-Mother-clash

ரசிகா என்ற பெயரில் ஹீரோயினாக நடித்து வந்த சங்கீதா, பல வருடங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெயர் மாறி குணசித்திர வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். பாலா இயக்கிய பிதாமகன் அவருக்கு ரீ-என்ட்ரி கொடுத்தது. பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டதும், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சங்கீதா வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் கீழ் பகுதியில் அவரது தாய் பானுமதி வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சங்கீதாவின் தாயார் பானுமதி, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் "என் மகள் சங்கீதா என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டு வீட்டை அபகரிக்க நினைக்கிறார். எனது வீட்டை மீட்டுத் தரவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக நடிகை சங்கீதா மகளிர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அந்த வீடு தனது வருமானத்தில் வாங்கியது என்றும், தனது பெயரில் இருக்கிறது என்றும், ஆனால் வீட்டை என்னிடமிருந்து பறித்து என் சகோதரர்களுக்கு கொடுக்க அம்மா பானுமதி திட்டமிடுவதாகவும், அதற்கு சம்மதிக்காததால் இந்த இந்த புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சங்கீதா கூறியுள்ளார்.

இதுகுறித்து சங்கீதா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த உலகத்திற்கு என்னை கொண்டு வந்த என் தாய்க்கு நன்றி. பள்ளியில் இருந்து நிறுத்தி 13 வயதிலேயே நடிக்க அனுப்பினீர்கள், என்னிடம் பல பிளாங் செக்கில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டீர்கள், குடிக்கு அடிமையாகி வேலைக்கே போகாத உங்கள் மகன்களுக்காக என்னை சுரண்டினீர்கள், நானாக போராடி வெளியேறும் வரை திருமணம் செய்ய விடவில்லை.

என் கணவருக்கு தொல்லை செய்து என் குடும்ப அமைதியை அழித்தீர்கள், இப்போது ஒரு பொய் புகார் அளித்துள்ளீர்கள். அனைத்திற்கும் நன்றி. உங்களால் தான் நான் சாதாரண குழந்தையாக இருந்து, தற்போது போராளியாக நிற்கிறேன். ஒரு தாய் எப்படி இருக்க கூடாது என்பதற்கு நீங்கள் உதாரணமாக மாறிவிட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
டி.வியை உடைக்கும் கமல்: வைரலாகும் வீடியோடி.வியை உடைக்கும் கமல்: வைரலாகும் ... ரகசிய திருமணம்: 3 ஆண்டுகளுக்கு பிறகு அறிவித்த மேக்னா நாயுடு ரகசிய திருமணம்: 3 ஆண்டுகளுக்கு பிறகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16 ஏப், 2019 - 03:25 Report Abuse
 nicolethomson காசு பணம் என்று அடிதடியே நடக்குது , உங்களை போராளியாக்கி விட்டார் என்று பாசிட்டிவ் ஆகா நினைத்திருப்பதில் மகிழ்ச்சியே, வாழ்த்துக்கள் , முரண் களைந்து குடும்பமாய் செல்ல உங்களின் சக்தி உங்களுக்கு ஆதரவளிக்கட்டும்
Rate this:
elangovan - TN,இந்தியா
15 ஏப், 2019 - 15:57 Report Abuse
elangovan No partiality between sons and daughters both have equal rights. The best relation ship in the world will be father and mother relation ship no money value for this . If mother or father did mistakes do not angery polite and explain the real fact and try to convincing him. God gives every one has father and mother. We should give respect and take care them.
Rate this:
15 ஏப், 2019 - 11:54 Report Abuse
ஸாயிப்ரியா அதே வசனம் அடுத்த வாரிசு வளர்ந்தால். ஒவ்வொரு தாயும் நம்மை மனதிலும் தூக்கி சுமந்திருப்பாள்.
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
15 ஏப், 2019 - 08:42 Report Abuse
Ganapathy படத்தில் காண்பித்தது சங்கீதாவின் அம்மாவா?
Rate this:
indian - chennai,இந்தியா
15 ஏப், 2019 - 08:08 Report Abuse
indian நிறைய குடும்பத்தில் பெற்றோர் இப்படி தான் இருக்கிறார்கள் . பெற்ற பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டும் பெற்றோர் எப்படி ஒரு சிறந்த பெற்றோராக இருக்க முடியும் .....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in