Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டி.வியை உடைக்கும் கமல்: வைரலாகும் வீடியோ

13 ஏப், 2019 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Kamal-boken-TV-video-goes-viral

கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற புதிய கட்சியை தொடங்கி வருகிற லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஒரு நிமிடம் 14 நொடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியில் கமல் நின்று கொண்டு தொலைக்காட்சி பார்க்கிறார். அந்த தொலைக்காட்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதர் நரேத்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேசும் காட்சிகளிள் ஒளிபரப்பாகிறது. இதனால் ஆத்திரடையும் கமல் தன் கையில் உள்ள ரிமோட்டை, டி.வி. மீது எறிந்து உடைக்கிறார். பின்னர் அவர் வாக்காளர்களை பார்த்து "யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்துவிட்டீர்களா?" என்று கேட்டு தனது கருத்துக்களை கூறி இறுதியாக அவர் கட்சிக்கு வாக்கு கேட்கிறார்.

இந்த வீடியோ வன்முறைய தூண்டுகிற அளவிற்கு இருக்கிறது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணனானது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவுக்கு வாக்காளர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது. கமல் இன்னும் நடிகராகவே இருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலி படத்தில் இணைகிறார் நித்யா மேனன்ராஜமவுலி படத்தில் இணைகிறார் நித்யா ... சொத்து பிரச்சினை: நடிகை சங்கீதா - தாய் மோதல் சொத்து பிரச்சினை: நடிகை சங்கீதா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

bal - chennai,இந்தியா
18 ஏப், 2019 - 18:37 Report Abuse
bal வெயில் ஜாஸ்தியாயிடிச்சு...
Rate this:
LOGANATHAN - new jerssy,யூ.எஸ்.ஏ
18 ஏப், 2019 - 18:23 Report Abuse
LOGANATHAN தன சினிமாவில் கூட அதிகமா தன இனத்தவருக்கே முன்னுரிமை கொடுத்த இவர் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்
Rate this:
Gnanam - Nagercoil,இந்தியா
17 ஏப், 2019 - 06:22 Report Abuse
Gnanam நல்ல நடிகராக இருந்த கமல் தற்போது கேலிக்கூத்துக்கு முன்னேறிவிட்டார்.
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
18 ஏப், 2019 - 06:12Report Abuse
Pannadai Pandianஇதுவும் நடிப்பு தான்….....
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
16 ஏப், 2019 - 15:18 Report Abuse
raghavan நீங்கள் அதி மேதாவியாச்சே..டிவி யை வீசி ரிமோட்டை உடைக்க வேண்டாமா ?
Rate this:
skv - Bangalore,இந்தியா
16 ஏப், 2019 - 04:43 Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆமாம் சாமி தேர்தல்னு சொன்னதுலேந்து எங்கேயும் எப்போதும் எல்லா நியூஸ் சானல் களிலும் சுடாலின் ஒருபக்கம் லோலோன்னுகத்த EPSங்கோய் ங்கோய் ன்னு கொசுரீங்காரமாப்பேச OPS பேசுறது ஒருஇலவும் புரியாமல் போக பிரேமலதா அவர்பங்குக்கு பேபே ன்னு கத்த தினகரன் பீத்தபெருமைகளா எடுத்துவிட என்று நான் டிவி தந்தேன் முழுஓய்வு நியூஸ் சானல்களே பாக்க வில்லை
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in