Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.கே.நகர் தள்ளி வைப்பு : தயாரிப்பாளர் அப்செட்

11 ஏப், 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
RK-Nagar-release-issue-:-Producer-upset

பத்ரி கஸ்தூரி என்ற முதலீட்டாளர் பெரும் பணத்துடன் கோடம்பாக்கம் வந்து பல படங்களில் முதலீடு செய்தார். முக்கியமாக கவுதம் மேனன் சம்மந்தப்பட்ட துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா, நரகாசூரன் ஆகிய படங்களில் முதலீடு செய்தார்.

இந்த 3 படங்களும் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. இதற்கிடையில் வெங்கட் பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி உடன், தன்னுடைய 'ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் இணைந்து ஆர்.கே.நகர் என்ற படத்தையும் தயாரித்தார் பத்ரி கஸ்தூரி. அய்யோ பாவம் பட்ட காலிலேயே படும் என்பதுபோல் ஆர்.கே.நகர் படமும் முடங்கிப்போனது.

வைபவ், சனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி, சம்பத்ராஜ், சந்தானபார்தி, சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த வருடமே வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல தடவை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் கடைசியாக இம்மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இப்போது இந்த படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படையாக சொல்ல முடியாமல் ஒரு வீடியோவைப் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டார் வெங்கட் பிரபு. மற்றொரு தயாரிப்பாளரான பத்ரி கஸ்தூரியோ இந்தப்படமும் ரிலீஸாவதில் பிரச்னை என்பதால் இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சசிகுமார் கைவசம் நிறைய படங்கள்சசிகுமார் கைவசம் நிறைய படங்கள் மீண்டும் 'நான்-வெஜ்' உணவிற்கு மாறிய சமந்தா மீண்டும் 'நான்-வெஜ்' உணவிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in