Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வாட்ச்மேன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' - இந்த வாரம் இரண்டே தமிழ்ப் படங்கள்

10 ஏப், 2019 - 17:27 IST
எழுத்தின் அளவு:
This-week-only-two-movies-releasing

படங்களின் தலைப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்த்ததும் ஆங்கிலப் படங்கள் என நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் செய்தியின் தலைப்பில் 'தமிழ்ப் படங்கள்' என்று குறிப்பிட வேண்டி உள்ளது. வரும் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு வந்தாலும், அன்றைய தினம் எந்த புதுப்படங்களும் வெளியாகவில்லை. அதற்கடுத்த நான்கு நாட்களுக்குள் தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு தினம் என்பதால் அந்த பரபரப்பில் யாரும் தியேட்டர்கள் பக்கம் வரமாட்டார்கள் என பல படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.

இருப்பினும், இந்தவார வெளியீடாக 'வாட்ச்மேன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. 'வாட்ச்மேன்' படத்தை விஜய் இயக்க, ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்திருக்கிறார். கடந்த வாரம்தான் ஜிவி பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' வெளிவந்து வரவேற்பைப் பெறாமல் போனது. அடுத்து இந்த வாரமும் அவருடைய படம் ஒன்று வெளிவருகிறது. 'வாட்ச்மேன்' ஆவது 'வாட்ச்சபிள் மேன்' ஆக இருக்குமா ?.

'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கி உள்ளார். 'மாயவன்' படத்திற்குப் பிறகு அவர் இயக்கி உள்ள படம் இது. இந்தப் படத்தின் டீசர் ஒன்று மட்டும் தான் வெளியாகி உள்ளது. படத்திற்கான எந்த ஒரு பிரமோஷன் நிகழ்வும் நடைபெறவில்லை. 'மாயவன்' படத்தை வித்தியாசமான கதையுடன் கொடுத்தாலும் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இந்த 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தை தங்கள் கேங்குடன் ரசிகர்கள் பார்த்தால் வெற்றி பெறலாம்.

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரே நாளில் வெளியாகும் ஆங்கிலப் படத் தலைப்புகள் கொண்ட படங்கள் என்ற பெருமை மட்டும் இந்தப் படங்களைச் சேரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகார்ஜுனாவுக்கு 'நோ' சொன்ன நயன்தாராநாகார்ஜுனாவுக்கு 'நோ' சொன்ன ... போனி கபூர் அழைப்பு : மூன்றில் ஒன்றாவது அஜித் ஏற்பாரா? போனி கபூர் அழைப்பு : மூன்றில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in