Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு நோட்டீஸ்

10 ஏப், 2019 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Salmankhan-get-notice

ஹிந்தியில் சல்மான்கான் நடித்த 'தபாங்' படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிபெற்ற நிலையில் தற்போது 'தபாங்-3' படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்றாம் பாகத்தை நடிகர் பிரபுதேவா இயக்குகிறார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மகேஸ்வர் பகுதியில் நர்மதா ஆற்றங்கரையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் அந்தப்பகுதி காவல் துறையினர் தாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு கொடுத்த விதிமுறைகளை மீறினால் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய நேரிடும் என்றும் படக்குழுவினரை எச்சரித்துள்ளனர்.

மகேஸ்வர் எம்.எல்.ஏ இந்த நிகழ்வு பற்றி கூறும்போது, “நாங்கள் எங்கள் மகேஸ்வர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதற்காக தான் 'தபாங்-3' படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தோம். தற்போது நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோடி படத்திற்கு தடை : தேர்தல் கமிஷன் செக்மோடி படத்திற்கு தடை : தேர்தல் கமிஷன் ... உலக கோப்பை வீரர்களுடன் 83 நட்சத்திரங்கள் கொண்டாட்டம் உலக கோப்பை வீரர்களுடன் 83 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
11 ஏப், 2019 - 03:52 Report Abuse
meenakshisundaram சல்மான் கானை உடனடியாக தமிழகம் அனுப்ப வேண்டும்,இங்கே நிறைய சிலைகளை எடுக்க வேண்டியுள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in