Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணு விஷாலை இயக்கும் வசந்தபாலன்

10 ஏப், 2019 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Vasantha-Balan-to-make-movie-with-Vishnu-Vishal

இயக்குநர்கள் திட்டமிட்டபடி படத்தை முடித்துக்கொடுத்த பிறகும் தயாரிப்பாளர்களால் திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாத நிலை அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளது. இதனல் தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அந்தப்படத்தை இயக்கிய இயக்குநர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

'வெயில்', 'அங்காடித்தெரு', 'அரவான்', 'காவியத்தலைவன்' ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க 'ஜெயில்' என்ற படத்தை இயக்கினார். ராதிகா சரத்குமார், 'யோகி' பாபு, ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு உட்பட அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன.

ஆனால் இப்படம் வெளியாகும் அறிகுறியே இல்லை. எனவே இயக்குநர் வசந்தபாலன் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். வசந்தபாலன் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இப்போது எழில் இயக்கும் 'ஜெகஜ்ஜால கில்லாடி' படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் படம் வெற்றியடைந்ததால் விஷ்ணு விஷாலைத் தேடி பெரிய இயக்குநர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அயோக்யாவை விரட்டிய முனிஅயோக்யாவை விரட்டிய முனி ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த நிகிஷா பட்டேல் ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த நிகிஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in