Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாக்காரர்களுக்கு என் மதிப்பு தெரியவில்லை: ஆண்ட்ரியா

10 ஏப், 2019 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Tamil-film-industry-did-not-know-my-value-says-Andrea

ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடாமல் தங்களுக்கு முக்கியத்தும் உள்ள கேரக்டர்களில் நடிப்பதையே இப்போதுள்ள முன்னணி ஹீரோயின்கள் விரும்புகிறார்கள். நயன்தாரா, த்ரிஷா, அமலாபால், அனுஷ்கா உள்பட பலர் அப்படித்தான் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாளிகை. சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பில் கமல்போரா, ராஜேஷ்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, தில்சத்யா இயக்கி உள்ளார். இதன் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆண்ட்ரியா பேசியதாவது:

இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு ஹிந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை. இது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் அதை பொறுத்துக் கொண்டு எனக்கு இடம் விட்டுக் கொடுத்து நடித்ததிற்காக ஹீரோ ஜே.கேவுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்கேநகர் தள்ளிவைப்பு : வெங்கட்பிரபு வேதனைஆர்கேநகர் தள்ளிவைப்பு : ... கமலால் கெட்டேன் : விவேக் காமெடி கமலால் கெட்டேன் : விவேக் காமெடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12 ஏப், 2019 - 08:26 Report Abuse
Srinivasan Kannaiya ஒரு தராசில் ஏறி நில்லுங்கள் வெய்ட் பார்த்துடுவோம்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10 ஏப், 2019 - 23:15 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்னொரு நடிகை டாப்சீ. ஹிந்தியில் சிறப்பான நடிப்பை தந்து இருக்கிறார். பிங்க் படத்தில் அவரும் அவரது நண்பிகளும் - ஆணாதிக்க அசிங்கத்தில், இன்றைய அரசியல் அதிகார, ஏவல்துறை எதேச்சாதிகாரத்தில், ஒரு பெண் தனியாக நிற்பது எவ்வளவு கஷ்டம் என்று நேர்த்தியாக சொல்லி நடிக்க வைத்திருப்பார் இயக்குனர். வெள்ளை தோலை மட்டும் காட்ட ஆயிரம் தயாரிப்பாளர்கள். அதில் உள்ள எக்கு இதயத்தையும், நடிப்பு கனலையும் காட்ட ஒரு சில நல்ல இயக்குநர்களால் தான் முடியும்.
Rate this:
ravi -  ( Posted via: Dinamalar Android App )
10 ஏப், 2019 - 15:03 Report Abuse
ravi ராதாரவிக்கு தான் தெரியும்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
10 ஏப், 2019 - 14:13 Report Abuse
Sathish நயன்தாரா போன்ற கேரளாக்காரிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் பெண்களான ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷிற்கு கொடுக்கலாம். நயனுக்கு எந்த வகையிலும் சளைத்தவரல்ல ஆண்ட்ரியா. மலையாளிகள் இங்கே வாங்கித்தின்றுவிட்டு அவர்கள் நாட்டிற்கு போனால் அங்கே நம்மையே கேவலமாக பேசுபவர்கள்.
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
10 ஏப், 2019 - 13:05 Report Abuse
Narasimhan தமிழ் சினிமா காரர்கள் மட்டுமல்ல. தமிழர்களுக்கே தமிழர்கள் எந்த துறையிலும் முன்னேறுவது பிடிக்காது. அரசியலில் தமிழர்கள் தெலுங்கன் மலையாளி கன்னடனுக்கு அடிமையாய் இருப்பது போல் அணைத்து துறைகளிலும் அதைத்தான் பார்க்க முடிகிறது.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in