Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் உடனான நட்பை கெடுத்துவிடாதீர்கள் : ரஜினி

09 ஏப், 2019 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Dont-spoil-my-friendship-with-Kamal-says-Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் அடுத்தப்படியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(ஏப்,9) வெளியான நிலையில், தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி.

அவர் பேசுகையில், எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விஷயத்தை பெரிதுப்படுத்தி, கமலுக்கும், எனக்கும் இடையேயான நட்பை கெடுத்துவிடாதீர்கள். நதிகளை இணைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறேன். பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையை பார்த்தேன். நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் என்று சொல்லியிருக்கிறார்கள், நிச்சயம் வரவேற்கத்தக்கது. நதிகள் இணைப்பு பற்றி முன்பே வாஜ்பாயிடம் பேசியிருக்கிறேன். இந்த திட்டத்திற்கு பகீரத யோஜனா என பெயர் வைக்கும்படியும் சொல்லியிருந்தேன்.

தேர்தலில் மக்கள் என்ன மாதிரியான தீர்ப்பு கொடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. ஒருவேளை பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்வேலையாக நிதிகள் இணைப்பை செய்ய வேண்டும். அப்படி செய்தால் நாட்டில் பாதி பிரச்னை தீர்ந்துவிடும். குறிப்பாக வறுமையே இல்லாமல் போய்விடும் என்றார்.

நடிகர் கமல்ஹாசன், லோக்சபா தேர்தலில் களம் காண்கிறார். இந்த தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்டதாகவும், அவரும் தருவதாகவும் சொன்னதாக கமல் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளார். இதனால் கமல் மட்டுமல்ல மற்ற கட்சியினரும் ஏமாற்றமாகி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வரவேற்பை பெற்ற டியர் காம்ரேட் முதல்பாடல்வரவேற்பை பெற்ற டியர் காம்ரேட் ... 'தர்பார்' போஸ்டரும் காப்பியா ? 'தர்பார்' போஸ்டரும் காப்பியா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vira - tamil naadu,இந்தியா
10 ஏப், 2019 - 12:07 Report Abuse
vira சப்பாணிக்கு யார் ஆதரவு ?
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
10 ஏப், 2019 - 08:52 Report Abuse
Raman Ganesan நான் கருப்பு அவர் காவி அப்படினு டயலாக் பேசி நான் தனி கட்சி அப்படினு வசனம் பசி இப்பஆதரவு பிட்சை எடுக்குறதுக்கு என்ன பெரு
Rate this:
Sanakkiyan - Erode,இந்தியா
09 ஏப், 2019 - 16:11 Report Abuse
Sanakkiyan இவர் டிரெக்டா காசு பன்னப்பாப்பார் ...ஆதரவு கொடுத்து அடுத்தவ காசு பண்ண விடமாட்டார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in