விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
மலையாளத்தில் சீனியர் நடிகரான சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார். இவர் லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில, நேற்று முன்தினம் திருச்சூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சுரேஷ்கோபி, சபரிமலை ஐயப்பன் கோயில் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளை பேசி ஓட்டு சேகரித்துள்ளார். இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சபரிமலை சர்ச்சை குறித்து சுரேஷ்கோபி பிரச்சாரத்தில் பேசியதாக அவருக்கு திருச்சூர் மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதோடு, 48 மணி நேரத்திற்குள் இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.