Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிருஷ்ணரை விமர்சிப்பதா.? - வீரமணிக்கு ராஜ்கிரண் பதிலடி

08 ஏப், 2019 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Rajkiran-slams-Veeramani-comment-about-Lord-Krishna

இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும், அவர் குற்றவாளி என பேசினார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து அவருக்கு எதிரான போராட்டாங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

இந்நிலையில், வீரமணியின் கீழ்த்தரமான பேச்சுக்கு நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக்கில் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது :

கி.வீரமணிக்கு... கடவுள் இல்லை என்பது, உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தின் குறிக்கோளும் ஒன்றே. அது, மனிதனை மேன்மைப்படுத்துவது. அன்பும், மனித நேயமும் தான், மனிதனை மேன்மைப்படுத்தும். அதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.அந்த போதனைகளை, ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச்செய்கிறது. அந்த வகையில் இந்து மதம், ராமர் பெருமானையும், கிருஷ்ணர் பெருமானையும், ஆஞ்சநெயர் பெருமானையும், சிவ பெருமானையும், பார்வதித்தாயையும், விநாயகப்பெருமானையும், முருகப்பெருமானையும், அவதார தெய்வங்களாக வழிபடச்சொல்வதன் மூலம், மனிதனை மேன்மைப்படுத்தும் போதனைகளைச் செய்கிறது.

இந்த அவதார தெய்வங்கள் மூலம் சொல்லப்படும் அனைத்து செய்திகளும் வாழ்க்கைத் தத்துவங்கள். அதற்குள் ஊடுருவி பார்த்தால் தான் உண்மைகள் புரியும். இந்த அடிப்படையை புரிந்து கொள்வதற்கு நீங்கள் நிறைய படித்து தெளிய வேண்டியதிருக்கும். எல்லா மத தத்துவங்களையும் கசடற கற்றுத்தெளியாமல், "கடவுள் இல்லை" என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டுப்போய்விட முடியாது. கற்றுத்தெளிய அரசியல்வாதிகளுக்கு நேரமும் இருக்காது.

ஈ.வெ.ரா, மதங்களின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிப்பதற்கு வேறு வழியே இல்லாமல் தான் கடவுள் மறுப்பு கொள்கையை கையிலெடுத்தாரே தவிர கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அல்ல, என்பது என் கருத்து. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால், சாகும் வரை "ராமசாமி" என்ற பெயரை தூக்கிச் சுமந்திருக்க மாட்டார்.

கடவுள் நம்பிக்கை இருக்கு, இல்லை என்பதை விட்டு விடுவோம். பிறர் மனதை நோகச்செய்வதும், பிறர் மத நம்பிக்கைகளை காயப்படுத்துவதும், பகுத்தறிவாகுமா. பகுத்தறிவின் உச்சக்கட்ட மேம்பாடு, அன்பும், மனித நேயமுமாகவே இருக்கும்.

இவ்வாறு ராஜ்கிரண் எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (90) கருத்தைப் பதிவு செய்ய
நடிகராக அறிமுகமாகும் ராம்கோபால் வர்மாநடிகராக அறிமுகமாகும் ராம்கோபால் ... சமந்தா, நாகசைதன்யாவுக்கு நாகார்ஜுனா வாழ்த்து சமந்தா, நாகசைதன்யாவுக்கு நாகார்ஜுனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (90)

Balachandar - Doha,கத்தார்
13 ஏப், 2019 - 13:36 Report Abuse
Balachandar கடமை, கலாச்சாரம், பண்பு, ஒன்று பட்டு வாழ்தல், இவை எல்லாம் கடவுளின் பெயரில் நம் முன்னோர்கள் நமக்கு போதித்தது, கடவுள் மருப்போர்கள் அவர்களின் விருப்பம், ஆனால் கடவுளை கேலி செய்வதன் மூலம் நீங்கள் என்ன கூற முயல்கிறீர்கள், வீரமணிக்கு ஹிந்து கடவுள் மட்டும் தான் இல்லை...
Rate this:
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
13 ஏப், 2019 - 12:14 Report Abuse
Mayuram Swaminathan தி காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், எதற்காக நம்பிக்கை உள்ளவர்களை புண்படுத்தவேண்டும்? இந்த ஒரு kaaranaththukkagave அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) அருமை நன்றி ராஜ்கிரண் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்காவது தைரியம் இருந்தால் மற்ற மதத்தை சேர்ந்த பொருள்களையும் இதே போன்று விமர்சித்தால்...நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் நீங்கள் உண்மையான கடவுள் மறுப்பாளிகள் என்று...
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
12 ஏப், 2019 - 10:09 Report Abuse
Thalaivar Rasigan ஒரு நடிகருக்கு இருக்கும் தெளிவு, போகும் இடமெல்லாம் மக்களுக்கு அட்வைஸ் செய்யும் பெரிய கட்சி தலைவருக்கு இல்லையே?
Rate this:
R.CHELLAPPA - Vadodara,இந்தியா
11 ஏப், 2019 - 17:45 Report Abuse
R.CHELLAPPA Veera money is not faith in our religion. Then why he is talking about our god/our tem etc. which means he is accepting existance of our god. He is talking nonsense about the prevailing problem which is due to Lord Krishna. Hindus are belief for the past several decades. Our society never faced such type of problem since inception of our faith and practices. This is happened because of such leaders who are creating hatered among our people.
Rate this:
மேலும் 85 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in