Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலை விரும்பாத விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன்

06 ஏப், 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Shanmuga-pandian-did-not-like-politics

விஜயகாந்த் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கி கடந்த 14 ஆண்டுகளாக அரசியலில் பயணித்து வருகிறார். அவர் உடல்நலக்குறைவில் இருப்பதால் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சகாப்தம், மதுரைவீரன் படங்களில் நடித்த விஜயகாந்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். அதையடுத்து அவர் அளித்த பேட்டியில், நான் நடிக்கயிருக்கும் தமிழன் என்று சொல் படவேலைகள் விரைவில் தொடங்கயிருக்கிறது. இந்த நேரத்தில் என்னை சந்திக்கும் நண்பர்கள், அரசியலுக்கு எப்போது வருவீர்கள்? என்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. எனது தந்தையின் பெயரை காப்பாற்ற சினிமாவில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

எங்கள் வீட்டில் எனது அண்ணன் அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஒருவர் வந்ததற்கே வாரிசு அரசியல் என்கிறார்கள். இதில் நான் வேறு வந்தால் இன்னும் விமர்சிப்பார்கள். அதனால் அரசியல் எனக்கு வேண்டாம். நான் முழுநேர நடிகனாகவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் சண்முகப்பாண்டியன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவுக்கு மீம் போட்டு வாழ்த்து சொன்ன விஜய் தேவரகொண்டாராஷ்மிகாவுக்கு மீம் போட்டு வாழ்த்து ... ஜெ., படம் : சுயசரிதையை தள்ளி வைத்த கங்கனா ஜெ., படம் : சுயசரிதையை தள்ளி வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 ஏப், 2019 - 18:52 Report Abuse
Vasudevan Srinivasan படம் வெற்றியை தோல்வியா தெரியாது ஆனால் 'சகாப்தம்' படத்தை முதல் நாளே பார்த்தேன் உங்களுக்கு திறமை இருப்பது தெரிந்தது நல்ல இயக்குனர்களிடம் கதை கேட்டு முன்னேறுங்கள்.. கூடுமானவரை கதைக்கும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் 'பிரம்மாண்டம்' எனும் மாயவலையில் விழவேண்டாம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in