Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி போலீஸாக நடிப்பது உறுதியானது

05 ஏப், 2019 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Rajini-166-:-Rajini-confirmed-acting-as-police

'பேட்ட' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அரசியல் ரீதியான படம் என முதலில் செய்திகள் கசிந்தன.

பின்னர், ரஜினி போலீசாக நடிப்பது கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகி உள்ளது. ரஜினிகாந்த் - முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஏப்., 10ம் தேதி முதல் மும்பையில் துவங்குகிறது. முன்னதாக படத்திற்கான போட்டோ ஷூட் பணிகள் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது.

அதில், ரஜினியை போலீஸ் உடையில் வைத்து பல்வேறு விதமான போட்டோ ஷூட் நடத்தி உள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையதளங்களில் லீக்காகி உள்ளன. இதன்மூலம் ரஜினி, போலீஸ் வேடத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

ரஜினி ஏற்கனவே, மூன்றுமுகம், பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் போலீசாக நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினி மீண்டும் போலீசாக நடிக்கிறார். இப்படம் அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நயன்தாராபொன்னியின் செல்வனில் பூங்குழலியாக ... ஹாலிவுட்டுக்கு கை கொடுக்கும் கோலிவுட் ஹாலிவுட்டுக்கு கை கொடுக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07 ஏப், 2019 - 18:59 Report Abuse
Mirthika Sathiamoorthi தலைவா முந்தய உங்கள் செய்தியில் கருத்து சொல்ல கந்தசாமிங்கள் யாரும் வராதனால எங்கே உங்க மாஸ்..உங்க மார்க்கெட் காணாம போயி உங்களை மக்கள் ஒத்திக்கிட்டாங்களோன்னு நினைச்சேன்.. ஹை இதோ வந்துண்டங்க சமூக கடமையாற்றா ரஜினி எனும் ஒரு நபருக்காக வண்டிகட்டிட்டு வந்து அவருக்கு அட்வைஸ் அம்புஜம் அப்பாடீங்கற மிகபெரிய பொறுப்பை எடுத்துக்கொண்ட கந்தசாமிங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...ரஜினியென்றால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் உங்களின் கடமை உணர்ச்சிக்கு பாராட்டுக்கள்... அப்பாட இப்பத்தான் உயிரே வந்துச்சு...தலைவா எனக்கு கண்ணுல தண்ணி தனியா வருது...நல்ல இருங்கட..பாசக்காரங்களா...
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
06 ஏப், 2019 - 13:25 Report Abuse
Raman Ganesan சீக்கிரம் வரச் சொல்லுங்க... பாக்கலாம்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
06 ஏப், 2019 - 09:32 Report Abuse
Raman Ganesan பாவம் இங்க உள்ள அழுகை மூஞ்சிகள் மூஞ்சி இல்லாதது, மூஞ்சி பார்க்க முடியாது எல்லாம் பெரிய தேச தியாகிகள் மாறி படம் காட்டுறாங்க நீங்க எல்லாம் உங்க வேலைய விட்டு நாட்டுக்கு சேவை செய்ய வருவீங்களா வர முடியுமா அவர் வேலை நடிக்குறது அத அவர் செய்யுறார் அதுல என்ன தப்பு உங்கள யாரு இந்த நியூஸ் படிக்கச் சொன்னது ரஜினி நியூஸ் அப்படினு வந்தவுடன் முதல படிச்சு புலம்பி கமெண்ட் யாரு போடுறது வேலை இல்லாம யாரு இருக்காங்களோ அவங்க தான் அதுக்கு இன்னொரு காரணம் 69 வயசுலயும் மாஸ் குறையம்மா கோடி கோடியா சம்பாதிக்குறாரு அந்த பொறாமை உங்க சமூக அக்கறை எல்லாம் இதுவரை நீங்க காசு வாங்கி ஒட்டு போட்ட போடா போற ஜாதி கட்சி மத கட்சி திருட்டு கட்சி புலம்பல் கட்சிக்கிட்ட கேளுங்க 50 வருஷமா 72 வருஷமா உங்களுக்கு ஒட்டு போட்டோம் என்ன செஞ்சிங்க இன்னைக்கும் பிட்சை எடுக்குற நிலைமை தான் நாங்க இருக்கோம் அப்படினு அவங்க கிட்ட கேளுங்க அதுக்கு அறிவு, சமூக அக்கறை தெளிவு, ஜாதி பாசம் ஊர் பாசம் முக்கியமா காசு பாசம் இலவச பாசம் இல்லம்மா இருக்கனும் முக்கியமா 7 ஆம் அறிவு இருக்கனும்
Rate this:
skv - Bangalore,இந்தியா
06 ஏப், 2019 - 04:19 Report Abuse
skv<srinivasankrishnaveni> போலீசா நடிக்கட்டும் போலீஸ்னா எப்படி எவ்ளோநேர்மையா உண்மையான மக்கள் நண்பனாக இருக்கணும் என்று நடிச்சுக்காட்டச்சொல்லவும் தங்கப்பதக்கம் சிவாஜிபோல . நம்ம நாட்டுலே போலீஸ்லே பலர் கைநீட்டி லஞ்சம் வாங்கறாங்க என்பது உண்மை அடிமட்டமலே பொதுஇடத்துலேயே பார்க்கலாம் இந்த கண்கொள்ளாகாட்ச்சியை ....................இதெல்லாம் காணமுடியாது
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05 ஏப், 2019 - 23:36 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நல்லவனா, ஆன்மீகவியாதி, அரசியல்வாதி, இப்படி எல்லாமே நடிப்பு தானே.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in