ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக்க பலரும் முயற்சித்து கைவிட்ட நிலையில், தற்போது மணிரத்னம் அதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார். அந்தவகையில், இந்தபடத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவியும், பெரிய பழுவேட்டையராக மோகன்பாபுவும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து பூங்குழலி என்ற முக்கிய கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் மணிரத்னம் பேசியிருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தவகையில், மணிரத்னம் இயக்கும் படத்தில் முதன்முதலாக நயன்தாரா நடிக்கப்போகிறார்.