முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
'பேட்ட' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடித்த 'தளபதி' படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் மூலம் மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தில் அவருடன் பணிபுரிய இருக்கிறார் சந்தோஷ் சிவன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி', ரஜினி நடித்த 'பேட்ட' ஆகிய படங்களுக்கு இசை அமைத்த அனிருத் இந்தப்படத்துக்கு இசை அமைக்கிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர் தவிர படத்தில் இன்னொரு நாயகியும் நடிக்கிறார்.
அவரிடம் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அந்த நடிகை ரஜினிக்கு ஜோடியில்லை, ரஜினிக்கு மகளாக நடிக்கிறார். கதாநாயகியை விட மகள் கதாபாத்திரத்துக்குத்தான் படத்தில் முக்கியத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.