போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி |
நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், லோக்சபா தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நாசரின் சகோதரார் சமீபத்தில் அளித்த பேட்டியில் "நாசர் வயதான தன் பெற்றோரையும், மனவளர்ச்சி குன்றிய தம்பியையும் கவனிக்காமல் விட்டு விட்டார். அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். அதற்கு காரணம் கமீலா, வீட்டை காப்பாற்றாதவர், எப்படி நாட்டை காப்பாற்றுவார். அவருக்கு ஓட்டுப் போடாதீர்கள்" என்றார். இதுகுறித்து நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள். சமீபகாலமாக என் குடும்பம் சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. கமீலா நாசருக்கு “ஓட்டுப் போட்டுவிடாதீர்கள் “ என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன்.
இதற்கு பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின்நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது. நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமீலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது.
நான் அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை விளக்க என் 40 ஆண்டு வாழ்க்கையை உங்களுக்கு சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன். உரிய நேரத்தில் உரியவர்களுக்கு செய்ய வேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது. அதைமீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சில புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.
வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட சகதி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன். தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன்.
தேர்தல் நிறைவுறட்டும், நானும் கமீலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.