Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்னேஷ் சிவன் நாக்குல சனி

05 ஏப், 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Sani-in-Vignesh-shivan-tongue

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து சில கருத்துகளை பேசினார் ராதாரவி. அது பெரும் சர்ச்சையானது. அதற்கு நயன்தாராவின் தற்போதைய காதலராக இருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், “இந்தப் படம் இன்கம்ப்ளீட் மூவி” என்று குறிப்பிட்டு டுவீட் பண்ணினார்.

விக்னேஷ் சிவனின் இந்த டுவீட்டால் கொலையுதிர் காலம் படத்தின் தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சியடைந்தார். முழுமையடைந்த படத்தை இன்கம்ப்ளீட் மூவி என்று சொல்வதற்கு விக்னேஷ் சிவன் யார்? அவர் நயன்தாராவின் அபீஷியல் புருஷனா என்று ஒரு வார இதழில் வறுத்தெடுத்தார்.

படம் முடிந்து வியாபாரம் தொடங்கிய நிலையில், கொலையுதிர்காலம் படத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன விநியோகஸ்தர்கள், விக்னேஷ் சிவனின் டுவீட் காரணமாக தற்போது படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்க முன்வந்த முன்னணி நிறுவனமும் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் கருத்துகளால் படத்தின் பல கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் மதியழகன். இன்னொரு பக்கம் இயக்குநர் சக்ரி டோலட்டியும் விக்னேஷ்சிவன் மீது வழக்கு தொடர்ந்து அவரது டுவீட்டால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரே தர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

மொத்தத்தில் விக்னேஷ் சிவனின் நாக்குல சனி.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வாழ்க்கையில், 'ரிஸ்க்' எடுக்கணும்!வாழ்க்கையில், 'ரிஸ்க்' எடுக்கணும்! அஜித்தின் அடுத்த படத்தை மறுத்த இயக்குநர்.? அஜித்தின் அடுத்த படத்தை மறுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஏப், 2019 - 19:16 Report Abuse
Ramesh Rayen கல்யாணம் பண்ணாமல் சனியன்கள் இப்படி ஒன்றாய் வாழ்ந்து நம் சமுதாய பெயரை கெடுகின்றனர்.
Rate this:
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
10 ஏப், 2019 - 07:28 Report Abuse
 Muruga Vel கனிக்கு சனியென்றும் பெயரா
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
07 ஏப், 2019 - 15:26 Report Abuse
THENNAVAN
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07 ஏப், 2019 - 04:47 Report Abuse
J.V. Iyer இப்படி சொன்னால் வழக்கு போடுவாய்ங்களா என்ன கேலி கூத்தாக இருக்கே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in