Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி ஆதரவு தருவாரா.? - காத்திருக்கும் கமல்

04 ஏப், 2019 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Did-Rajini-support-Kamal-party.?

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சமகால நடிகர்கள். 40 ஆண்டுகளாக சினிமாவில் தங்களை தக்க வைத்து கொண்டுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை உணர்ந்த இருவரும், அரசியல் களத்தில் குதித்தனர்.

கமலுக்கு முன்னரே அரசியல் பயணத்தை வெளியிட்டார் ரஜினி. தொடர்ந்து மாவட்டம் வாரிய நிர்வாகிகளை நியமித்தார். மேலும், ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். ஆனால் அதன்பின்னர் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.

சட்டசபை தேர்தலே இலக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என ரஜினி வெளிப்படையாக கூறிவிட்டு, அடுத்தப்படியாக முருகதாஸின் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

ரஜினிக்கு பின்னர் அரசியல் ஆசையை வெளியிட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, இதோ லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கி உள்ளார்.

ரஜினியிடம் ஏற்கனவே கமல்ஹாசன் மறைமுகமாக ஆதரவு கேட்டார். அதாவது, "தேர்தலில் எங்களுக்கு ரஜினி ஆதரவு அளிக்க விரும்பினால் அளிக்கலாம், அது அவரது விருப்பம். இதுதொடர்பாக அவர் மட்டுமே முடிவெடுக்க முடியும்" என முன்பு ஒரு பேட்டியில் கமல் கூறினார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி ரஜினியிடம் கேட்டதாகவும், அவரும் கண்டிப்பாக செய்கிறேன் என சொன்னதாகவும், ரஜினி ஆதரவு தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது" என கூறி உள்ளார்.

நீண்டகால நண்பர் என்பதால் கமல்ஹாசனுக்கு, ரஜினி ஆதரவு அளிப்பாரா.? அல்லது வழக்கம் போல் மவுனமாய் இருந்துவிடுவாரா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தமிழுக்கு வரும் குக்கூ நாயகிமீண்டும் தமிழுக்கு வரும் குக்கூ ... முனிக்கு போட்டியாக தயாராகும் சண்டிமுனி முனிக்கு போட்டியாக தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

05 ஏப், 2019 - 18:30 Report Abuse
ஸாயிப்ரியா நட்பு வேறு ஆன்மீகம் வேறு. உங்களுக்கு நண்பர், கேரள முதல்வரதான் செட் ஆவார்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
05 ஏப், 2019 - 14:47 Report Abuse
Raman Ganesan இப்பமட்டும் ரஜினி சப்போர்ட் பண்ணா கமல் கட்சி VOTE INCREASE ஆகும் உண்மை இப்ப தான் புரியுதா ஒரு தொகுதி கூட கமல் ஜெயிக்க மாட்டார் இது தமிழ்நாடு மட்டும் இல்ல உலகம் முழுவதும் தெரியும்
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05 ஏப், 2019 - 08:04 Report Abuse
Srinivasan Kannaiya ரகசியம்/.... அது பரம ரகசியம்
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05 ஏப், 2019 - 08:03 Report Abuse
Srinivasan Kannaiya ragasiyamaaga kattalai idalaam... poruthiru...
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
05 ஏப், 2019 - 05:02 Report Abuse
Thalaivar Rasigan அவருக்கு கட்சி பெயரே இல்லை-அவர் கொள்கையை முதலில் அறிவிக்கட்டும்-எந்த தண்ணீரை சொன்னார்-அவருக்கு காவி கட்சி கொள்கைதான் பிடிக்கும்-திமுக மேடையில் அமராமல் இருந்தது ரஜினியின் தற்காப்பு, எனக்கு தன்மானம் மேற் சொன்னவை எல்லாம் ரஜினியை கமல் தாக்கி பேசிய வசங்கள் இப்போ மீண்டும் மீண்டும் ஆதரவு வேண்டும் என பேசி கொண்டே இருக்கிறார். யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லி விட்டவரை தொந்தரவு செய்வது எந்த வகையில் நியாயம். 1 கோடி உறுப்பினர்கள் இருந்தும், சட்டசபை பொது தேர்தல்தான் இலக்கு என்று சொல்லி விட்டவரை தோற்பதற்கென்றே கட்சி ஆரம்பித்து 1 லட்சம் உறுப்பினர்கள் கூட இல்லாமல், யார் வேண்டுமானாலும் என் கட்சியின் வழியே தேர்தலில் நிற்கலாம் என்று இந்தியாவிலேயே முதன்முறையாக சொல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிவிட்டார்.
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in