விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
ராஜு முருகன் இயக்கிய 'குக்கூ' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா நாயர். அந்தப்படத்துக்குப் பிறகு பெரிய அளவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். குக்கூ எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் அவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன் பிறகு அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் வளராமல் முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில் தற்போது கண்ணாடி என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் மாளவிகா நாயர். அவருக்கு ஜோடியாக நரகாசுரன் பட இயக்குநர் கார்த்திக் நரேன் நடிக்கிறார். கார்த்திக் நரேன், மாளவிகா நாயர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் முடிந்தது.
'திருடன் போலீஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஆன்யா சிங் நடிக்கிறார்.
ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை 'மதுரவீரன்' படத்தை தயாரித்த 'வி ஸ்டுடியோஸ்' நிறுவனமும், 'ஸ்ரீசரவணா பிலிம்ஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.