Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: இரு கோடுகள் - விருதையும், வசூலையும் குவித்த படம்

01 ஏப், 2019 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Iru-Kodugal-:-golden-jubilee-film

கே.பாலச்சந்தர் இயக்கிய படங்களில் டாப்-10 பட்டியலில் இடம்பெறும் படம் இரு கோடுகள். சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு விருதுகளையும், வசூலையும் குவித்த படம். காரணம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அந்த அளவிற்கு சிறப்பானதாக இருந்தது.

ஜெமினி கணேசன், சவுகார் ஜானகி, ஜெயந்தி, நாகேஷ், வி.எஸ்.ராகவன், எஸ்.பி.சகஸ்ரநாமம், உள்பட பலர் நடித்திருந்தார்கள். வி.குமார் இசை அமைத்திருந்தார், என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

"ஒரு பெரிய கோட்டை சின்னதாக்க வேண்டும் என்றால் அதன் அருகில் அதைவிட ஒரு பெரிய கோட்டை போட வேண்டும்" இந்த லாஜிக்தான் இருகோடுகள் படத்தின் உயிர்நாடி. கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவான ஜெமினி கணேசன், சவுகார் ஜானகியை காதலிப்பார், திருமணமும் செய்து கொள்வார். ஆனால் அரசு வேலையில் இருக்கும் ஜெமினிக்கு சாதாரண பெண்ணான சவுகார் ஜானகி பொருத்தமானவர் அல்ல என்று ஜெமினி குடும்பம் நிராகரிக்கும், சதி செய்து ஜெமினியையும், சவுகாரையும் பிரிக்கும்.

இதனால் கோபம் அடையும் சவுகாரின் தந்தை, மகளை கலெக்டராக்குவார். ஜெமினி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் கலக்டராக வந்து அமருகிறார் சவுகார் ஜானகி. அதன்பின்னர் ஜெமினி கணேசன், அவரது மனைவி ஜெயந்தி, சவுகார் ஜானகி ஆகியோருக்கு இடையில் நடக்கும் மனப்போராட்டம் தான் கதை.

"புன்னகை மன்னன் பூவிலே கண்ணன், நான் ஒரு குமாஸ்தா, பாப்பா பாட்டு பாடிய பாரதி நானே" போன்ற சிறந்த பாடல்களும் இடம் பெற்ற படம் இது. 1969ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்திற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இன்றும் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பானால் வேறு சேனலுக்கு மாற மாட்டார்கள். பல திரைப்படக் கல்லூரிகளில் திரைக்கதைக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ராம்கோபால் வர்மா இயக்கும் 'சசிகலா'ராம்கோபால் வர்மா இயக்கும் 'சசிகலா' தமிழில் வெளிவருகிறது ஹெல்பாய் தமிழில் வெளிவருகிறது ஹெல்பாய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

02 ஏப், 2019 - 00:39 Report Abuse
ஐஷ்வர்யன் சுவாரஸ்யமும் புத்திசாலித்தனமுமான திரைக்கதை படைக்க கே.பி.சாருக்கு இணையாக இன்னொருவரை இன்னமும் தமிழ் திரையுலகு பார்க்கவே இல்லை.
Rate this:
Sanakkiyan - Erode,இந்தியா
01 ஏப், 2019 - 21:57 Report Abuse
Sanakkiyan இந்த பாலச்சந்தர்தான் புறச்சின்னரே பேருல ஊறகெடுத்த நல்லவன்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
01 ஏப், 2019 - 19:49 Report Abuse
Vasudevan Srinivasan இந்த படத்தில் இன்னொரு முக்கியமான பாடலும் உண்டு அது நாகேஷ் அவர்கள் பாரதியாராக நடித்து தவறான புரிந்து கொள்ளப்பட்ட (அன்றே) பெண்சுதந்திற்கு குட்டு (அறிவைத்தானே கூட்டச்சொன்னேன் ஆடையை நானா குறைக்கச்சொன்னேன்.?) வைக்கும் 'பாப்பா பாட்டு பாடிய பாரதி நான்தானே' என்ற பாடல். இயக்குனர் சிகரம் இயக்குனர் சிகரம்தான்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in