'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
சர்ச்சைக்குரிய படங்களை இயக்கும் ராம்கோபால் வர்மா அடுத்து 'சசிகலா' என்ற பெயரில் ஜெயலலிதா, சசிகலா நட்பு பற்றிய பயோபிக் படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் இயக்கத்தில் 'லட்சுமியின் என்டிஆர்' என்ற படம், என்டிஆர், லட்சுமி இடையிலான தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பயோபிக் படம், கடந்த வாரம்தான் தெலுங்கில் வெளியானது. படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை. சில ஏரியாக்களில் மட்டும் நன்றாக ஓடுவதாகத் தகவல்.
ராம்கோபால் அறிவித்துள்ள 'சசிகலா' படத்தில் சர்ச்சைக்குரிய வாசங்களை அவர் சேர்த்துள்ளார். இரக்கமில்லாத மனிதர்கள், சிறை, மன்னார்குடி கும்பல் ஆகியவற்றின் உறவைச் சொல்லும் கதை. 'காதல், அபாயகரமான அரசியல்' என்ற டேக்லைன் 'சசிகலா' என்று தலைப்பின் கீழ் சேர்த்துள்ளார். படத்தின் அறிவிப்பே சர்ச்சையுடன் ஆரம்பமாகியுள்ளது.
'லட்சுமியின் என்டிஆர்' படத்திற்கு ஆந்திராவில் தடை கிடைத்தது போல, இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியாகும் போது பல பிரச்சினைகள் எழலாம் என்பதை இப்போதே சொல்லலாம்.