நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம், அக்காலகட்டத்தில் வாழ்ந்த மெய்ஞானிகள் மற்றும் அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம் மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாகும்.
புகழ்பெற்ற இந்த நூல் தற்போது ஒலி வடிவில் (ஆடியோ புக்) வெளிவந்திருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதனை வெளியிட்டு பேசிய ரஜினி "இந்த புத்தகம் ஆன்மிக உலகத்தையே புரட்டி போட்ட புத்தகம் , அனைவரும் நம்பிக்கையோடு, பக்தியோடு புத்தகத்தில் இருப்பதை பின்பற்றினால், கோபம் குறைந்துவிடும் வாழ்க்கையில் துன்பத்தின் தாக்கம் இருக்காது" என்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்கள் அரசியல் பற்றி கேட்க முயற்சித்தனர். "இந்த புத்தகத்தை படியுங்கள். வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.