பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித் | சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் | ரம்யாவின் வொர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் கமெண்ட்ஸ் | 'புஷ்பா 2' : கமல்ஹாசன் மட்டும் மிஸ்ஸிங் | கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி |
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் விரைவில் துவங்க இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் முன்னெடுத்துவிட்டு பின்வாங்கிய கல்கியின் பொன்னியின் செல்வனை தற்போது மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து 200 கோடியில் இந்தப் படத்தை எடுக்க இருக்கிறார்.
அமிதாப்பச்சன், ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், விக்ரம், மோகன் பாபு என தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதில் பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கேரக்டரான குந்தவி நாச்சியார் கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கீர்த்த சுரேஷ் இளம் நடிகையாக இருந்தாலும் மகாநடி படத்தில் சாவித்ரியாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால் இந்த கேரக்டருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி 2020 தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் படம் பற்றிய முழுமையான அறிவிப்பை, லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசும் இணைந்து அறிவிக்க இருக்கிறது.