‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி, திருமணத்திற்கு பிறகும் தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடிக்கத் தொடங்கி விட்டார். தமிழில் குற்றபயிற்சி, தெலுங்கில் ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்தில் டாக்டர் 56, நன்னா பரகரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், வொயிட் என்ற பெயரில் ஒரு குறும் படத்திலும் நடித்துள்ளார் பிரியாமணி. இதில் அவர் கண் பார்வை குறைபாடுள்ள பெண்ணாக நடித்துள்ளார். கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஒரு நாய்குட்டியும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இந்த குறும் படத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.