ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா | நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் |
ஒரு படத்தை வெளிவருவதற்கு முன்பு பிரமாதமான படம் என அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் கூறுவார்கள். ஆனால், படம் வெளியாகி அதன் ரிசல்ட் என்ன என்று தெரிந்ததும் அது பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள். இது பல படங்களுக்கு நடந்த ஒன்றுதான். அப்படி ஒரு சம்பவம் தற்போது 'ஐரா' படம் குறித்து நடந்திருக்கிறது.
நயன்தாரா நடித்து இதுவரை வெளிவந்த பேய்ப் படங்களில் 'மாயா' படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதற்கடுத்து இரண்டு வருடங்கள் கழித்து வந்த பேய்ப் படமான 'டோரா' படம் தோல்விப் படமாக அமைந்தது. அந்தப் படங்களுக்குப் பிறகு நயன்தாரா ஒரே சமயத்தில் 'ஐரா, கொலையுதிர்காலம்' என இரண்டு பேய்ப் படங்களில் நடித்து முடித்தார். அவற்றில் முதலில் வர வேண்டிய படமான 'கொலையுதிர் காலம்' படத்தை முந்திக் கொண்டு 'ஐரா' வந்தது. ஆனால், படத்தின் ரிசல்ட் சரியில்லை. படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்டம் வரும் எனச் சொல்கிறார்கள்.
'ஐரா' படத்தை அடுத்து நயன்தாரா நடித்துள்ள மற்றொரு பேய்ப் படமான 'கொலையுதிர் காலம்' படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 'ஐரா' படத்தின் ரிசல்ட்டால் 'கொலையுதிர் காலம்' படத்தின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்கிறார்கள். ஏற்கெனவே, அந்தப் படத்தில் பல சர்ச்சைகள் நடந்து வருகின்றன. இப்போது புதிதாக இந்த வியாபாரச் சிக்கலும் சேர்ந்து கொண்டுவிட்டது. 'கொலையுதிர் காலம்' படத்தை ஆரம்பித்த காலம் சரியில்லை போலிருக்கிறது.