அழியாத கோலங்களாய் தலைமுறைகள் கடந்து வாழும் பாலுமகேந்திரா | ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? |
சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் ச்சப்பக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. காரணம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்கிற பெண் கதாபாத்திரத்தில் அதற்கான முகத்தோற்றத்துடன் நடிக்கிறார் தீபிகா படுகோன்.
அதேசமயம் தீபிகா படுகோனின் முதல் ஹீரோவான ஷாருக்கான், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது முக அறுவை சிகிச்சைக்காக சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறார். கடந்த மகளிர் தினத்தன்று டில்லியில் உள்ள ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 50 பெண்களுக்கு அறுவை சிகிச்சைக்காக ஸ்பான்சர் செய்திருந்தார் ஷாருக்கான். அதையடுத்து அடுத்ததாக கோல்கட்டாவில் வசிக்கும் இதேபோன்ற ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு ஆளான இன்னொரு 50 பேருக்கும் அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஷாருக்கான்.