இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
கோவையில் 6 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியை கொலை செய்த நபர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து விசாரித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், கோவை சிறுமி கொலை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெற கூடாது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் இவ்வளவு தாமதம் ஏன் என்று தெரியவில்லை.
வீட்டின் அருகே 20 அடி தள்ளி குழந்தைகள் விளையாடக்கூடிய சூழல் இல்லாவிட்டால் நல்ல தமிழகமாக இருக்காது. இந்த சம்பவத்திற்கு பிறகு இங்கிருக்கும் மற்ற பெற்றோர்கள் பதட்டத்தில் உள்ளனர். இதை தணிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், போலீஸ்க்கும் உண்டு. இது தேர்தல் சமுதாயத்திற்கான பேச்சு அல்ல, அதையும் தாண்டி முக்கியமான சமுதாய கடமை. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். என்ன தேர்தல் இருந்தாலும், அதை விட முக்கியமானது இந்த சம்பவம். இந்த வழக்கில் போலீஸ் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன் என்றார்.