பாலிவுட்டில் பிஸி : மும்பையில் வீடு வாங்கினார் ராஷ்மிகா | படப்பிடிப்பில் விபத்து : ஷில்பா ஷெட்டி கால் எலும்பு முறிந்தது | நடிகர் சூர்யா மீதான வழக்கு ரத்து | இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது |
2011ல் தன் இயக்கத்தில் வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர் தியாகராஜன் குமாரராஜா. அந்த முதல் படத்திற்குப் பிறகு அவர் இயக்கத்தில் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள இரண்டாவது படமான 'சூப்பர் டீலக்ஸ்' படம் இன்று(மார்ச் 29) வெளியாகி உள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள் படம் பற்றி வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தனர். இன்று காலைக் காட்சியில் படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தில் நடித்துள்ளவர்களில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் தவறவிட்டுவிட்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
2016ம் ஆண்டில் தான் இந்த 'சூப்பர் டீலக்ஸ்' படம் பற்றி அறிவித்தார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அந்த அறிவிப்புக்கு முன்பாக இப்படத்திற்காக சிலரைச் சந்தித்து கதை சொன்னாராம். அவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் என்கிறார்கள். அப்போதுதான் சிவகார்த்திகேயன், பெண் வேடத்திலும் நடித்த 'ரெமோ' படம் வெளியாகி உள்ளது. அதனால், தியாகராஜன் எந்தக் கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயனை அணுகியிருப்பார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். 'ரெமோ' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கிய இயக்குனரும் அப்போது இருந்தார் என்று ஒரு தகவல்.
எந்தக் காரணத்திற்காக சிவகார்த்திகேயன் இந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை வேண்டாமென முடிவெடுத்திருந்தாலும் அது மிகப் பெரிய 'மிஸ்'தான் என்பதில் சந்தேகமில்லை.