Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூப்பர் டீலக்ஸ் - விமர்சனம் எழுதிய நியூயார்க் டைம்ஸ்

29 மார், 2019 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Newyork-times-congrats-Superdeluxe

இந்திய சினிமாவின் வளர்ச்சி கடந்த சில வருடங்களில் உலக அளவில் பரந்து விரிந்து வருகிறது. இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமாதான் என்பது முன்னர் இருந்தது. அதை சமீபகால தமிழ், தெலுங்கு படங்கள் முறியடித்து வருகின்றன.

உருவாக்கம், கதை சொல்லல், நடிப்பு என சில விஷயங்களில் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் சில சிறந்த திரைப்படங்கள் வருகின்றன. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற இயக்குனர்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனர்கள் என யாரையும் மனமுவந்து குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

ஆனாலும், தன் முதல் படமான 'ஆரண்ய காண்டம்' படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்ற தியாகராஜன் குமாரராஜா, அவரது இரண்டாவது படமான 'சூப்பர் டீலக்ஸ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக இருப்பார் என்று இன்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அதன் எதிரொலியாக அமெரிக்காவின் புகழ் மிக்க பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ் அதன் இணையதளத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. வணிகரீதியிலான இந்தியப் படங்களில் பாலியல் என்பது இன்னும் வெளிப்படையாக காட்டப்படாத நிலையில், இந்தப் படத்தில் அது உணர்வின் ஒரு பகுதியாக உள்ளது. தனித்துவமான ஒரு படம் சூப்பர் டீலக்ஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் அதர்வாஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் ... லட்சுமியின் என்டிஆர் - ஆந்திராவில் தடை லட்சுமியின் என்டிஆர் - ஆந்திராவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

bal - chennai,இந்தியா
05 ஏப், 2019 - 13:07 Report Abuse
bal இது படக்குழுவின் திருட்டு புதி
Rate this:
bal - chennai,இந்தியா
05 ஏப், 2019 - 13:06 Report Abuse
bal மட்டமான படம்...தமிழ் நாட்டில் இல்லாத ஒன்றை பள்ளிக்குஅழந்தைகளை கெடுக்கும் படம்...எவனுக்கு வேணுமோ அவன் வீட்டில் மட்டும் போடுங்க...தியேட்டர்களில் போடாதீங்க.
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
01 ஏப், 2019 - 19:56 Report Abuse
K.P  SARATHI உள்ளதை அப்படியே படம் எடுக்க முட்டாளுக்கு கூட தெரியும் . ரசிகர்கள் மனதை அறிந்து படம் எடுக்க தெரிந்தவன் தான் சிறந்த டைரக்டர். எங்கள் பணம் நேரம் வீணானது
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
01 ஏப், 2019 - 16:02 Report Abuse
Nallavan Nallavan எல்லாம் ஒரு விளம்பரம்தான் .....
Rate this:
Ram - ottawa,கனடா
01 ஏப், 2019 - 09:46 Report Abuse
Ram வெளிநாட்டுக்காரன் எழுதறன்ன அதுக்கு உள்நோக்கம் எதாவது இருக்கும், இல்ல படக்குழு எதாவது தில்லாலங்கடி பண்ணியிருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in