நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
சினிமாவில் பேசுவது, நிஜ வாழ்க்கையில் பேசுவது இரண்டையும் திரையுலகத்தில் இருக்கும் பலர் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் அவர்கள் இருப்பதற்கும், திரையில் அவர்கள் இருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அதைப் புரிந்து கொள்ளாமல் பலர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தவறிழைப்பவர்களின் மீதான விமர்சனங்கள் கூட அந்தஸ்து, பேர், புகழ் பார்த்துதான் வருகிறது. சமீபத்தில் வெளிவந்த '90 எம்எல்' படத்தில் ஆபாசமான வசனங்கள், காட்சிகள் இருக்கின்றன என்று பலராலும் குற்றம் வைக்கப்பட்டது. அந்தப் படத்தை பெண் இயக்குனர் அனிதா உதீப் இயக்க, டிவியில் பிரபலமாக இருந்தாலும் சினிமாவில் பெயரெடுக்காத ஓவியா நடித்திருந்ததால் பலரும் பொங்கி எழுந்தார்கள்.
ஆனால், 'ஐரா' படத்தில் ஒரு பெண்ணை, அதுவும் பெண் பத்திரிகையாளரை ஒரு ஆண் மோசமாக, ஆபாசமாக, அந்தப் பெண்ணின் உயர்வைக் கொச்சைப்படுத்தும் விதமாக வசனம் இருப்பதையோ, அதற்குப் பதிலாக அப்படிப் பேசிய கதாபாத்திரத்தின் பெயரான 'ஆதி' என்பதை மிக மோசமான ஒரு கெட்ட வார்த்தைக்கு 'இரட்டை அர்த்தம்' பொருள்படும்படி நயன்தாரா பேசியிருப்பதை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு ராதாரவி, நயன்தாராவை இரட்டை அர்த்த வசனத்துடன் விமர்சித்தார் என திரையுலக சங்கங்கள், திரைப் பிரபலங்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து சர்ச்சையை எழுப்பினார்கள். அது நடந்த சில நாட்களில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள 'ஐரா' படத்தில் அப்படி ஒரு காட்சி, வசனம் இடம் பெற்றிருப்பதற்கு எந்த திரையுலகப் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, எந்த சங்கங்களும் அறிக்கைவிடவில்லை.
எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் 'இமேஜ்' பார்த்துதான் தெரிவிப்பார்கள் போலிருக்கிறது.