Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஞ்சனா 3 டிரைலர் - விமர்சனம்

28 மார், 2019 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Kanchana-3-Trailer-out

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்க, ஓவியா, வேதிகா நாயகிகளாக நடிக்க, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி, ஸ்ரீமன், நிக்கி டம்போலி, கபிர் துகான் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'காஞ்சனா 3' படத்தின் டிரைலர் இன்று(மார்ச் 28) யு-டியூபில் வெளியிடப்பட்டது.

இதற்கு முன் ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் 2007ல் வெளிவந்த 'முனி', 2011ல் வெளிவந்த 'முனி 2 - காஞ்சனா', 2015ல் வெளிவந்த 'முனி 3 - காஞ்சனா 2' வரிசையில் 'முனி 4 - காஞ்சனா 3' படம் இது.

முந்தைய படங்களைப் போலவே இதுவும் ஒரு பேய்ப் படம்தான் என்பது முன்னரே தெரிந்த விஷயம்தான். வழக்கம் போல ஒரு பேய்ப் படத்தை பார்த்துப் பயப்படும் விதத்திலும், நகைச்சுவைப் படமாகவும் கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.

'எனக்கு ஒண்ணுன்னா கூட விட்டுட்டு போயிடுவேன், ஆனா, என் பசங்களுக்கு ஒண்ணுன்னா வெட்டிட்டுதான்டா போவேன்,' 'நெருப்பைக் கூட தொடலான்டா, கற்பைத் தொடக் கூடாது', 'நீ மாஸ்னா நான் டபுள் மாஸ்' என ராகவா லாரன்சின் 'பன்ச்' டயலாக் படத்தில் இருக்கிறது. 'மாஸ், பக்கா மாஸ், டபுள் மாஸ்' என மாஸ் டயலாக்குகளை ராகவா லாரன்ஸ் விடமாட்டார் போலும்.

படம் முழுவதுமே அந்த வயதான தோற்றத்தில்தான் ராகவா லாரன்ஸ் இருப்பாரா அல்லது பிளாஷ் பேக்கில் ஒரு இளமையான தோற்றத்தில் வருவாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

2015ல் ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படத்தின் கெட்டப் தான் இந்த 'காஞ்சனா 3' படத்தின் வயதான கெட்டப். அதன்பின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற பெயரில் தெலுங்குப் படமான 'பட்டாஸ்' படத்தை இயக்கி நடித்து 2017ல் வெளியிட்டார்.

அந்த கெட்டப் ராகவாவுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கும். அதை இத்தனை வருடங்கள் கழித்து 'காஞ்சனா 3' படத்திற்காக மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். வயதான தோற்றத்தில் உள்ளவருக்குள் இளமையான பேய் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்யும் கதையாக இந்தப் படத்தின் கதை இருந்தாலும் இருக்கும்.

படத்தின் இரண்டு கதாநாயகிகளான ஓவியா, வேதிகா பயப்படும் காட்சிகள் சில வினாடிகள் டிரைலரில் வந்து போகின்றன. அது போலவே, கோவை சரளா, ஸ்ரீமன் சில வினாடிகள் வருகிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் மிகச் சுமாராக உள்ளன.

இசையமைப்பாளர் என தனிநபர் இல்லாமல் ஒரு இசை இணையதளம் இசையை வழங்குவது ஆச்சரியம்தான்.

டிரைலர் என்றால் 2 நிமிடங்களாவது இருக்கும். இந்த டிரைலர் டீசர் அளவில் 1 நிமிடம் 16 வினாடிகள்தான் இருக்கிறது.

வெளியான சில மணி நேரங்களுக்குள் 10 லட்சம் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது. ஆனால், யு டியூபில் டிரைலரின் ஆடியோ தரம் மிக மோசமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் இளமையான அஜித்ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் ... தமன்னா டேட்டிங் செல்ல விரும்பும் நடிகர் தமன்னா டேட்டிங் செல்ல விரும்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in