அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பேய் படம் தேவி. இப்படம் பிரபுதேவாவுக்கும் ஹீரோவாக ரீ-என்ட்ரி தந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. புதிதாக நந்திதா உள்ளிட்ட சிலர் இணைந்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து ஏப்.,12ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் டீசரை வெளியிட்டுள்ளனர். முதல்பாகத்தில் கிராமத்து பெண்ணான தமன்னாவின் உடம்பிற்குள் நடிகையின் ஆவி ஒன்று புகுந்து கொண்டு அட்டகாசம் செய்யும்.
இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா, தமன்னா இருவரது உடம்பிற்குள்ளும் இரண்டு பேய்கள், புகுந்து அட்டகாசம் செய்து போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதை டீசர் உணர்த்துகிறது. மேலும் டீசரின் முடிவில் கோவை சரளா ஒரு பேய் அல்ல, இரண்டு பேய் என உறுதி செய்திருக்கிறார்.