Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிர்பார்ப்பை ஏற்றும் 'சூப்பர் டீலக்ஸ்'

27 மார், 2019 - 16:44 IST
எழுத்தின் அளவு:
More-expectation-for-Superdeluxe-film

'ஆரண்ய காண்டம்' என்ற சிறந்த படத்தைக் கொடுத்த ஒரு அறிமுக இயக்குனருக்கு முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இடையேயான இடைவெளி சுமார் 8 ஆண்டுகள் என்பது அதிகமானது தான். 2011ம் ஆண்டு வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தியாகராஜன் குமாரராஜா, சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார். அத்துடன் அந்தப் படத்திற்கு சிறந்த படத் தொகுப்பிற்கான தேசிய விருதும் கிடைத்தது.

அப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்பிபி சரணுக்கும், தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் அந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி கூட போடப்படவில்லை. பலரும் தியேட்டரில் படத்தைப் பார்த்துதான் பாராட்டி விமர்சனம் எழுதினார்கள். தியாகராஜனும் அப்போது அந்தப் பிரச்சினை குறித்து எதுவும் வெளிப்படையாகப் பேசவில்லை. இருப்பினும் அறிமுகப் படத்திற்காக தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் 8 ஆண்டுகள் கழித்து அடுத்த படத்தைக் கொடுப்பது ஆச்சரியமான ஒன்று.

தியாகராஜன் குமாரராஜா இயக்கி விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' நாளை மறுநாள் வெளிவர உள்ளது. இப்படத்தின் 'டிங் டாங்' புரோமோ ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. ஏற்கெனவே, படத்தின் டிரைலர் வித்தியாசமாக அமைந்த நிலையில், நேற்றைய புரோமோவும் வித்தியாசமாக எடிட்டி செய்யப்பட்டிருந்தது. திரையுலகினர், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலரும் படத்தை பார்க்க ஆர்வத்துடன் உள்ளார்கள்.

நயன்தாரா நடித்துள்ள 'ஐரா' படத்தை விடவும் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக திரையுலக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் குறித்து சிரஞ்சீவி புது முடிவுஅரசியல் குறித்து சிரஞ்சீவி புது ... தேவி 2வில் ஒன்றல்ல இரண்டு பேய் தேவி 2வில் ஒன்றல்ல இரண்டு பேய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in