சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தென்னிந்திய நடிகர்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று, எம்எல்ஏ ஆகி, பின்னர் எம்பி ஆகி, மத்திய அமைச்சராவும் பதவி வகித்து, தற்போது அரசியலே வேண்டாம் என ஒதுங்கி இருப்பவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.
சிரஞ்சீவியின் இளைய தம்பி பவன் கல்யாண் தற்போது ஜன சேனா என்ற கட்சியை ஆரம்பித்து நடைபெற உள்ள ஆந்திரா சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலையும் சந்திக்க உள்ளார். இந்நிலையில் வரும் தேர்தலில் தம்பியின் ஜனசேனா கட்சிக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவியை சில ஜனசேனா தொண்டர் சென்று, 'ஜெய் ஜனசேனா' என்று சொல்லும்படி வற்புறுத்தியாகத் தகவல் வெளியானது. அதனால்தான், பிரச்சாரத்திற்குப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவெடுத்துள்ளாராம். மேலும் தேர்தல் முடியும் வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போவதில்லையாம்.
சிரஞ்சீவியின் மூத்த தம்பியான நாகபாபு, சமீபத்தில்தான் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார். அவருக்காகவும் சிரஞ்சீவி பிரச்சாரம் செய்ய மாட்டார் என்கிறார்கள். சிரஞ்சீவியின் குடும்பத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சினிமா ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.