Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ன கதை.?

27 மார், 2019 - 12:05 IST
எழுத்தின் அளவு:
What-is-the-story-of-Gangs-of-Madras.?

மாயன் படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கியுள்ள படம் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ். அஷோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹரி டபுசியா இசை, கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் ஏப்ரல் 12ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி சி.வி.குமார் கூறியதாவது:

நிறைய கேங்ஸ்டர் படங்கள் வருகிறது. ஆனால் இந்தப்படம் அதிலிருந்து வித்தியாசமானது. இது வட சென்னையில் மட்டும் நடக்கும் கதையல்ல. சென்னை முழுக்க நடக்கிற கதை. ஆசிய அளவில் போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் சென்னை முக்கிய இடத்தில் இருக்கிறது. சத்தமில்லாமல் முதல் இடத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறது.

போதை மருந்து கடத்தல் கேங்ஸ்டர்கள் தனியாக தெரியமாட்டார்கள். கையில் எப்போதும் துப்பாக்கி வைத்துக் கொண்டு திரிய மாட்டார்கள். மளிகை கடை முதலாளிகளாக, ஜவுளிகடை முதலாளிகளாக, டிரைவராக, டாக்டராக இப்படி பல முகங்களில் நடனமாடுவார்கள். அவர்களை கண்டுபிடிப்பது கடினம். இப்படிப்பட்ட ஒரு கும்பலுக்குள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் மாட்டிக் கொள்கிறாள். அதிலிருந்து அவள் எப்படி வெளியில் வருகிறாள் என்பதுதான் படத்தின் கதை. தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. வருகிற 12ந் தேதி படம் வெளிவருகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டலில் வசந்த மாளிகை : டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவாஜி குடும்பத்தினர்டிஜிட்டலில் வசந்த மாளிகை : டிரைலர் ... கார்த்திக் வில்லன் ஆகிறார் அன்சன் பால் கார்த்திக் வில்லன் ஆகிறார் அன்சன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

THALA - salem,இந்தியா
27 மார், 2019 - 12:26 Report Abuse
THALA கோலமாவு கோகிலா வா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in