Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் அரசியலில் குதித்த ரஜினிகாந்த் நண்பர்

26 மார், 2019 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Rajini-friend-Mohanbabu-again-joints-in-Politics

தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் இந்த தேர்தல் சமயத்திலும் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் இறங்குவேன் என்று ரஜினி சொல்லி நீண்ட காலம் ஆன பிறகும் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத் தேர்தலிலும் கட்சி ஆரம்பித்து போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். அதனால், ரஜினிகாந்தின் அரசியல் பயணம் இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். அதுபோலவே ரஜினிகாந்தின் மற்றொரு நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபு, இன்று(மார்ச் 26) ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார்.

ஐதராபாத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் மோகன்பாபு. இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்பாபு, 20 ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கு தேசம் கட்யில் சேர்ந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்தவர். அதன் பின்னர் அவர் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகினார். நீண்ட ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

கடந்த வாரம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அவர் போராட்டம் நடத்த முயன்று வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், ஆளும் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு சவாலாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியில் இணைந்துள்ள மோகன்பாபு தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலிலும் சிறப்பாக நடிக்கும் பவன் கல்யாண்அரசியலிலும் சிறப்பாக நடிக்கும் பவன் ... ஜெயலலிதாவாக நடிப்பது ஏன்? - கங்கனா ஜெயலலிதாவாக நடிப்பது ஏன்? - கங்கனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in