Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆபாசப் படங்கள் - தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ?

26 மார், 2019 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Did-Producer-Council-and-Nadigar-will-take-action-against-Adult-movies

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சில படங்களில் முத்தக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என பரவலாக இடம் பெறுகின்றன. டீசர், டிரைலர் ஆகியவற்றில் அப்படிப்பட்ட காட்சிகளைச் சேர்த்து ரசிகர்களிடம், குறிப்பாக இளம் ரசிகர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, தியேட்டர்களுக்கு அவர்களை வரவழைக்கும் மலிவான யுக்தியைக் கையாளுகின்றன.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, சமீபத்தில் வெளிவந்த '90 எம்எல்' உள்ளிட்ட படங்கள் ஆபாசப் படங்கள் என்றே முத்திரை குத்தப்பட்டன. அந்த மாதிரியான படங்களுக்கு தியேட்டர்களும் எளிதாகக் கிடைக்கின்றன. நல்ல தரமான படத்தை எடுப்பவர்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில்லை என நல்ல படங்களை எடுப்பவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நடிகை நயன்தாராவை, ஒரு விழாவில் நடிகர் ராதாரவி அவதூறாகப் பேசியதாக கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் பரபரப்பாக இருந்தன. அது குறித்து நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ராதாரவியைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கைகளில் “ராதாரவி பேசிய இரட்டை அர்த்த வசனங்கள் வருத்தத்திற்குரியது” என்ற பொதுவான வாக்கியம் இடம் பெற்றிருந்தது. இரண்டு அறிக்கைகளையும் ஒருவரே எழுதிக் கொடுத்த ஒற்றுமை அதில் தெரிகிறது.

ஒரு சினிமா விழா மேடையில் முன்னாள் நடிகர் சங்க செயலாளர், இந்நாள் டப்பிங் யூனியன் சங்க தலைவர், சீனியர் நடிகர் ராதாரவி பேசிய அந்த இரட்டை அர்த்த வசனம் தவறு என்று கண்டிக்கிறார்கள். அப்படியென்றால் சில கோடி மக்கள் பார்க்கும் விதத்தில் 'இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ள ஆபாசப் படங்களை” தயாரிப்பவர்களுக்கும், அந்தப் படங்களில் நடிப்பவர்களுக்கும் அந்த சங்கங்கள் கண்டனம் தெரிவிக்குமா என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

எதிர்காலத்தில் அப்படிப்பட்ட படங்கள் மற்றும் பெண்களைக் கேலி செய்யும் காட்சிகள், கற்பழிப்பு காட்சிகள் ஆகியவை தமிழ் சினிமாவில் உருவாகாத அளவிற்கு, எந்த ஒரு நடிகரும், நடிகையும் நடிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுப்பார்களா என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதாபாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா ஆபாச அர்ச்சனை : ராதாரவிக்கு கைவந்த கலை ஆபாச அர்ச்சனை : ராதாரவிக்கு கைவந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Natarajan Attianna - Coimbatore,இந்தியா
27 மார், 2019 - 08:43 Report Abuse
Natarajan Attianna முதலில் ரெட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகளை பேசி பழக்கியதே தமிழ் நாட்டின் பாதுகாவலன் என தன்னை பற்றி பிதற்றிக் கொண்டிருந்த திமுக தலைவர் தான். அன்று தமிழ்நாடு அசம்பிளியில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த நாயகியை பார்த்து ரெட்டை அர்த்தத்தில் பேசி கழக கண்மணிகளே கைதட்ட வைத்தவர் அன்றைய திமுக முதல்வர். இன்று கபட நாடகம் ஆடுகிறார்கள். இவர்கள் பெண்ணெனித்திட்கு செய்த கேவலங்கள், இன்று குடும்ப தலைக்காட்சியில் செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் எண்ணில் அடங்கா இவர்கள் ராதா ரவியை விமர்சிக்க அருகதை அற்றவர்கள். இன்று அரசியலிக்கு நாடகம் அரங்கேற்றுகிறார்கள். தன் மகனின் காதலிக்கு வக்காலத்து.
Rate this:
S.Baliah Seer - Chennai,இந்தியா
27 மார், 2019 - 08:18 Report Abuse
S.Baliah Seer என்னிடம் கவுன்சலிங்குக்கு வருபவர்களில் செக்ஸ் பிரச்சினைகளால் வருபவர்களே அதிகம். இதற்கு காரணம் ஆபாச சினிமாக்கள் இல்லை. நெட்டில் போடும் அருவருப்பு செக்ஸ் தளங்கள் தான். ஆபாச சினிமா படங்களை காட்டிலும் மோசமானது இரட்டை வசன ஹோமோ காமடி. இதை அதிகமாக சினிமாவில் புகுத்தியவர் வடிவேலு. ஏய் மச்சான் ஒரு புது பீசு கிடைச்சிருக்கு ஒருவாரம் வெச்சி அடிக்கலாம். வடிவேலைப் பிடித்து வைத்துக்கொண்டு மகாநதி சங்கர் போனில் பேசுவது இது.
Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
27 மார், 2019 - 07:52 Report Abuse
Roopa Malikasd சபாஷ் சரியான கேள்வி. அதுக்கு தான் மத்தவன் முதுகுல எவ்வளவு அழுக்கு இருக்குன்னு குறை சொல்லுவதற்கு முன் தன்னுடைய முதுகுல இருக்கும் அழுக்கை மதிப்பிட வேண்டும் என்றார்கள் நம் முன்னோர்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27 மார், 2019 - 04:00 Report Abuse
meenakshisundaram ரெகார்ட் டான்ஸ் என்று பொருட்காட்சிகளில் ஒன்றை நடத்தும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது கள்ளப்பணத்தை நல்ல வழியில் செலவழிப்பார்கள் என்று இணைந்ததால் அது தமிழ் ரசிகர்களின் மடத்தனமே.
Rate this:
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
27 மார், 2019 - 01:51 Report Abuse
Vanavaasam A சான்றிதழ் பெற்று தானே வெளியிடுகிறார்கள் ? அதில் தவறு என்ன இருக்கு ? நம்ம மக்களுக்கு அடுத்தவனை குறை கூறியே பழக்கம் ஆகி போயிருச்சு ...
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in