Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா

26 மார், 2019 - 15:22 IST
எழுத்தின் அளவு:
JayaPrada-joints-in-BJP

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த நடிகை ஜெயப்பிரதா, பா.ஜ.வில் இணைந்துள்ளார். பல கட்சிகளில் இதற்கு முன் இருந்த ஜெயப்பிரதா, 1994ம் ஆண்டு முதல் முறையாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்ததன் மூலம் அரசியலில் நுழைந்தார். அதன்பின் அந்தக் கட்சியை விட்டு விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அங்கிருந்து 2010ல் விலகி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியில் இணைந்தார்.

2014ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் தொகுதியில் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரதா நான்காம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

இந்நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. அந்தத் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியத் திரையுலகத்தில் இருந்து கர்நாடகாவில் சுமலதா, பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் களத்தில் குதிக்க உள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் பற்றி பரவும் வதந்திவிக்ரம் வேதா தெலுங்கு ரீமேக் பற்றி ... ஆபாசப் படங்கள் - தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ? ஆபாசப் படங்கள் - தயாரிப்பாளர் சங்கம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Shroog - Mumbai ,இந்தியா
27 மார், 2019 - 01:42 Report Abuse
Shroog ஜெயப்பிரதாவை பார்க்கும் ஒன்று மட்டும் புரியும். அழகு நிரந்தரமல்ல. ஜெயப்பிரதா சலங்கை ஒளி போன்ற படங்களில் அனுஸ்கா போன்ற அழகு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in