Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டுவிட்டரில் சித்தார்த் - விக்னேஷ் சிவன் மோதல்

26 மார், 2019 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Siddharth---Vignesh-sivan-clash-in-Twitter

இரண்டு தினங்களுக்கு முன்பு கொலையுதிர் காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார். இது திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதாரவி சார்ந்துள்ள கட்சி கூட அவரை தற்காலிகமாக நீக்கும் அளவிற்கு சென்றது.

ராதாரவியின் கருத்துக்கள் குறித்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். நடிகர் சித்தார்த் இந்த விவகாரம் பற்றி மறைமுகமாக கருத்துக் கூறும்போது, “ஒரு பிரபலமான பெண் கோபப்பட்டால் மட்டுமே, தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புகிறது.. நீங்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே உங்களுக்காக பேசுகிறீர்கள்.. தைரியம் என்பது இதுவல்ல.. மேலும் மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சோக கதைகளை பகிர்ந்து கொண்டபோது, ஒரு சிலர் இதுபற்றி எதுவும் பேசாமல் அமைதியாக தள்ளி என்றார்கள் என்பதால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது” என கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில், “ஒருவர் சோசியல் மீடியாவில் அமைதியாக இருக்கிறார் என்பதால் மட்டுமே அவர் அந்த விவகாரத்தில் ஆதரவாக இல்லை என அர்த்தமில்லை. நயன்தாரா எப்பொழுதுமே பெண்களின் நலனுக்காக, அவர்கள் பாதுகாப்புக்காக பக்கபலமாக நின்றிருக்கிறார்.. இதில் கருத்து சொல்லி அதை பிரபலமாக்குவதை விட தன்னுடன் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பையும் எளிதாக பணிபுரியும் சூழலையும் உருவாக்கி கொடுத்துள்ளார்.

மேலும் மேலும் தன்னுடன் பணியாற்றிய பெண்கள் உட்பட பலருக்கு 'மீ டூ'வால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மனதளவிலும் பொருளாதார ரீதியாகவும் உதவி வருகிறார். என்ன ஒன்று, இதையெல்லாம் அவர் சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி விளம்பரம் தேடிக்கொள்ள தவறி விட்டார் என கூறியுள்ளார்” விக்னேஷ் சிவன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
களவானி 2வில், 90எம்எல் ஓவியா இல்லை: இயக்குனர் உறுதிகளவானி 2வில், 90எம்எல் ஓவியா இல்லை: ... விஜய், அஜித்தை சந்திக்க முயன்ற நடிகை விஜய், அஜித்தை சந்திக்க முயன்ற நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

THENNAVAN - CHENNAI,இந்தியா
27 மார், 2019 - 18:28 Report Abuse
THENNAVAN இப்போ இவருக்கு தேவை இருக்கு. விடுங்க நம்ம மேலும் காத்திருப்போம்.
Rate this:
27 மார், 2019 - 09:57 Report Abuse
கதை சொல்லி நயன்தாரா பெண்களை காப்பாற்றுவார். ஆண்களை கபளீகரம் செய்திடுவார். காதல் செய்ய கூலிக்கு வேலை செய்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். கொஞ்சம் ஓவர் சீன் போட்டுத்தான் ஆக வேண்டும்.
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
26 மார், 2019 - 12:54 Report Abuse
Jothi நீ இதையும் பேசுவ இதற்கு மேலும் பேசுவ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in