Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராதாவிக்கு தயாரிப்பாளர் சங்கமும் கண்டனம்

26 மார், 2019 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Producer-council-condemended-to-Radharavi

கொலையுதிர் காலம் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கமும் ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகில் மூத்த கலைஞரான ராதாரவி, அத்திரைப்படத்தின் கதாநாயகியான நயன்தாராவை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியும், மற்ற நடிகைகளையும் கொச்சை படுத்துவதுபோல் ரெட்டை அர்த்ததுடன் பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தும், சக கலைஞரை தகாத வார்த்தைகளால் பேசுவது, ஒட்டுமொத்த துறைத்துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. திரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் ராதாரவி, நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார்.

அது திரைத்துறை மட்டுமின்றி, பொது வாழ்க்கையிலும் அவரது மதிப்பையும் மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி திறைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீரழிக்கும். இச்செயலுக்காக ராதாரவிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி கையில் 18 படங்கள்விஜய் சேதுபதி கையில் 18 படங்கள் மீடூ காட்சிகள் : ராதிகா - சின்மயி மோதல் மீடூ காட்சிகள் : ராதிகா - சின்மயி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
26 மார், 2019 - 12:20 Report Abuse
Vasudevan Srinivasan விளையாட்டு வினையாகும் என்பதற்கு உதாரணம் இது.. சும்மா நகைச்சுவைக்காக பேசிவிட்டு இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டார் திரு. ராதாரவி அவர்கள்
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
26 மார், 2019 - 10:47 Report Abuse
Jothi ....ராதாரவி அவளை பற்றி பேசியதில் ஒன்றும் தவறு இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in